மின்னியல் வணிகத்தால் விளைவுகள்
மின்னியல் வணிகம் என்பது நாம் இணையத்தில் செய்யும் வணிகம் எனப்படும். இன்றைய இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் நம் நாட்டில் மட்டுமல்லாமல் இன்னும் பல நாடுகளில் மின்னியல் வணிகம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.எண்ணிலடங்கா மக்கள் மின்னியல் வணிகத்தைப் பயன்பாட்டில் கொண்டுள்ளனர். சிறுதொழில் செய்பவர்கள் முதல் பெருந்தொழில் செய்பவர்கள் வரை பலரும் மின்னியல் வணிகத்தை விரும்பி மேற்கொள்கின்றனர். ஆகையால், இணையம் வழியாக மேற்கொள்ளப்படும் மின்னியல் வணிகத்தால் பல உள்ளன. மின்னியல் வணிகம் மேற்கொள்வதனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறுதொழில் மற்றும் பெருந்தொழில் செய்பவர்கள் தங்களது வியாபாரத்தை அல்லது பொருட்களை அதிகளவில் விற்பனை செய்யலாம். இதனால், வியாபாரிகள் அதிகமான அளவில் தங்களது வருமானத்தை ஈட்டலாம். மின்னியல் வணிகத்தால் வியாபாரம் செய்வதற்கு முன்பு சிறுதொழில் வியாபாரிகள் உள்நாட்டில் மட்டுமே வியாபாரம் செய்தனர். இதனால், குறைந்த வருமானமே பெற்று வைத்தனர். அதோடு மட்டும் இல்லாமல், மின்னியல் வணிகத்தால் குறைந்த செலவில் பல நாடுகளுக்குப் பொருளை விற...