ஆனந்த கிருஷ்ணன்
மிகக் குறுகிய காலத்திலேயே மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக அனைவரும் அதிசயிக்கும் வகையில் உயர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். வணிகக் குடும்பம் அல்லாத பின்னணியைக் கொண்ட ஆனந்த கிருஷ்ணன், வணிகத்துக்கான உலகப் புகழ்பெற்ற கல்வி மையமான அமெரிக்காவின் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தான் பெற்ற கல்வி மற்றும் அமெரிக்காவில் பெற்ற வணிக அனுபவத்தைக் கொண்டும், எண்ணெய் பரிமாற்ற வணிகத்தில் தான் ஏற்கனவே ஈட்டிய வருமானத்தைக் கொண்டும் மலேசியாவில் சில வணிக முயற்சிகளில் ஈடுபட்டார். பல்வேறு நவீனமயமான வணிகத் திட்டங்களில் ஈடுபட்டுத் தனது வணிக நிறுவனங்களைப் பெருக்கி, தொழிலை விரிவாக்கிக் கொண்டார். அவர் தொடங்கிய, முதலீடு செய்த தொழில்கள் அனைத்துமே, நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டவை என்பதுதான் அவர் மிகக் குறுகிய காலத்தில், மிகப் பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட சீன வணிகர்களைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் இரண்டாவது பணக்காரர் இடத்தை அவர் பிடிப்பதற்கு உதவி புரிந்தது. நாட்டின் உயர்ந்த கட்டடமான பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தை நிர்மாணிப்பதில் பெட்ரோனாசுடன் இணைந்து முக்கிய பங்கு...