வெற்றி
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வகையில் வெற்றி வருகிறது. கயல்விழி பதினாறு வயது இளம்பெண். கயல்விழிக்கு பாடல் பாடுவதிலும், பாடல் வரிகள் எழுதுவதிலும் மிகுந்த நாட்டம் கொண்டவள். கயல்விழியின் தோற்றமோ கிளியைப் போன்றது.அவளது குரலோ குயிலைப் போன்றது. ஆயினும், பாட்டில் நாட்டம் செலுத்துவதானால் அவள் தினமும் தன பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்குவாள். அவளது நண்பர்களோ சிலர் அவள் பாடுவதை ரசிப்பார்கள்; சிலரோ பொறாமை கொண்டு வெறுத்தனர்.
பதினாறு வயதுடைய கயல்விழி தனது படிப்பிலும் திறமைகளிலும் போட்டிகுமான ஈடுபாட்டையம் கவனத்தையும் செலுத்தினால். காலம் பணத்தைப் போல உருண்டோடியது. அவளுக்கும் வயது பதினேழானது. தனது எஸ்.பி.எம் தேர்வுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. பாட்டிலும் படிப்பிலும் சமமளவு ஈடுபாட்டைச் செலுத்தியதனால் அவள் தனது மாதிரி எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த புள்ளிகளைப் பெறவில்லை. படிப்பில் சிறந்த மாணவியின் சரிவுண்ட தேர்ச்சிகள் கயல்விழியின் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் சோகக் கடலில் மூழ்கடித்தது. இரண்டு மாதங்கள், தனது எஸ்.பி.எம் தேர்வுக்காக தயாராகினால். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்களைத் தன் விறல் நுணியில் வைத்திருந்தால். எஸ்.பி.எம் தேர்வில் பன்னிரண்டு 'ஏ'க்களைப் பெற்றாள்.
எஸ்.பி.எம் தேர்வுக்குப் பிறகு மேற்படிப்புப் படிக்க ஆசைப்பட்டாள். அதற்கிடையில் வேலைக்குச் சென்று சுயமாக பாடல் வகுப்பிற்குச் சென்றாள். அவளது சம்பளம் தனது குடும்பத்திற்கும் பாடல் வகுப்பிற்கும் மீதம் சேமிப்பிற்கும் போதுமானதாக இருந்தது. இருப்பினும், ஊண் உறக்கமின்றி தன திறமையை மேன் மேலும் வளர்த்துக் கொண்டாள். அவளது குரலின் இனிமையில் அனைவரும் மயங்கினர். ஆனால், கயல்விழி சுயமாக இயற்றிய பாடல் வரிகளை மதிக்கவில்லை. தன்குரலுக்குக் கிடைத்த மதிப்பு தன பாடல் வரிகளுக்குக் கிடைக்கவில்லையே என பெரிதும் கலங்கினாள்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது மேற்படிப்பிற்காக மலாயாப் பல்கலைக்கழகம் சென்றாள். அங்கு அவள் குரலுக்கு அடிமையாகாதவர்களே இல்லை. பல்கலைக்கழகத்தில் இருக்கும் பறவை,ஈ, எறும்பு என தங்களது வேலைகளை நிறுத்திவிட்டு அவள் பாடும் அழகையும் குரலையும் இரசிக்கும். ஆசிரியர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் பல பாராட்டுகளைப் பெற்றாள். அவளை பிடிக்காதவர்களோ அவளை ஒதுக்கி வைத்தனர். ஒவ்வொரு முறையும் அவள் பாடல் வரிகள் எழுதுகையில் அந்தத் தாட்களைப் பிடுங்கி கிழித்து கொடுமை செய்தனர். கயல்விழி தனது முயற்சியை அனைவரின் முன்னிலையிலும் நிலைநிறுத்தினால். தான் பயிலும் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தான் சுயமாக இயற்றிய பாடல் வரிகளை பாடிக்காட்டுவாள் செல்வாள்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு பட்டதாரியாகினால். அவளது பெற்றோர்களும் உற்றார் உறவினர்களும் அளவிற்கடந்த சந்தோஷத்தில் வானத்தின் உச்சியையே தொட்டனர். அவளது படிப்பிற்குப் பிறகு அவள் வேலைக்குச் சென்றால். கோவிட்-19இன் குடும்ப வறுமையினால் அவளால் வகுப்பிற்குச் செல்ல இயலவில்லை. பெற்றோர்கள் அறுபது மேற்பட்டவர்கள். அதோடு, அக்காள் தன் கணவன் வீட்டில் இருப்பதோடு தங்கையும் படிக்கிறாள். ஆகையால் அவள் குடும்பத்தில் அவள் ஒருத்தியின் பணம் மட்டுமே. அதோடு, முழு நேர வேலைக்குச் செல்வதனால் பாட்டு எழுதுவதில் அவள் நேரம் செலவிடுவதில்லை. வேலை செய்யுமிடத்திலோ அக்கறையுடனும், பொறுப்புடனும், பொறுப்புடனும், சுறுசுறுப்புடனும் வேலை செய்வதினாலும் பிறருக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதினால் பாட்டுப் பாடமாட்டாள். என்றாவது ஒரு நாள் வானொலி கேட்கும்போது அதில் ஒளிபரப்பப்படும் பாடல்களைப் பாடுவாள்.
ஒரு நாள், தனது பழைய தோழியைச் சந்தித்தாள். இருவரும் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அவளது தோழி, " கயல், உனக்குத்தான் நன்றாகக் பாடாத தெரியுமே. அதுவும், பாடல் வரிகள் எழுதுவதில் நீதான் கெட்டிகாரி ஆயிற்றே! கோலாலம்பூரில் பாட்டுப் பாடும் மற்றும் பாட்டெழுத்தும் போட்டியொன்று நடைப்பெறவுள்ளது. நீ கலந்துக் கொண்டால் என்ன? வெற்றியாளருக்கு ஒரு லட்சம் கொடுக்கவுள்ளனர்," என கயல்விழியிடம் கூறினாள். அப்போட்டிக்கோ ஒரு மாத அவகாசம் மட்டும் மிஞ்சியிருந்தது. வேலை முடிந்து வீடு செல்லும் வழி,குளிக்கும் நேரம், பாட்டு கேட்கும் நேரங்களில் பலவித பாடல்களைப் பாடுவாள். விடாமுயற்சியுடன் செயல்பட்டாள். போட்டியின் நாள் வந்தது. போட்டிக்குப் பதிவு செய்துவிட்டு போட்டியாளர்களிடத்தில் அமர்ந்தாள். அனைவரும் பாடி போட்டியும் முடிவடைந்தது.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, போட்டியின் வந்தன. "முதல் பரிசை வெல்லப்போவது வினாடிகளை எண்ணியதன் பிறகு பாப்போம். பாத்து,ஒன்பது,...," என நடுவர் வினாடிகளே எண்ண கயல்விழியின் இதயத் துடிப்பு அவளுக்கே கேட்டது. "ஒரு லட்சம் ரொக்கப்பணத்தை வெல்வது கயல்விழி" என்றதும் அவளாலேயே அதனை நம்ப இயலவில்லை. காண்பது கனவா அல்லது நினைவா என ஆனந்தக் கண்ணீருடன் தனது பரிசைப் பெற்றாள். அன்றிலிருந்து பலருக்கும் பல இடங்களில் பாட்டு வகுப்பு நடத்தி வருகிறாள்.
Comments