தொற்றுநோய்களால் மனிதர்களுக்குப் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உலகில் பல உயிரினங்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றன. முக்கிய பங்கை வகிக்கின்றனர். மனிதர்களாகிய நமக்குப் பல திசைகளிலிருந்து பல பிரச்சனைகள் வருகின்றன; பாதிப்புகள் ஏற்படுகின்றன. அப்பிரச்னைகளில் ஒன்றுதான் தொற்றுநோய் ஆகும். ஒன்றாம் நூற்றாண்டில், நோய்கள் பல உருவெடுக்கப்படுகின்றன. தொற்றுநோயானது மனிதர்களைத் கைப்பிடியில் வைத்துள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை. தொற்றுநோய் மனிதர்களுக்குப் பல பாதிப்புகளையும் துன்பங்களையும் ஏற்படுத்துகின்றன. சாதாரண சலி அல்லது காய்ச்சல் என்றாலே நாம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிடுவோம். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவருக்கும் அவர் கொடுக்கும் மருந்துகளுக்கும் பணம் செலுத்துவோம். இதனால், மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. அதோடு, உடல் நிலை மோசமாக இருப்பின், மருத்துவமனையிலேயே தங்க நேரிடும். இதனால், காட்டில், உணவு மற்றும் இன்னும் சிலவற்றிற்கு அதிகமான பணத்தைச் செலவு செய்ய நேரிடும். அதே வேளையில், தொற்றுநோயாக இருப்பின் அருகில் இருப்பவர்களுக்கும் அந்நோய் பரவும். தக்க சமயத்தில் சிகிச்சை...