தொற்றுநோய்களால் மனிதர்களுக்குப் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உலகில் பல உயிரினங்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றன. முக்கிய பங்கை வகிக்கின்றனர். மனிதர்களாகிய நமக்குப் பல திசைகளிலிருந்து பல பிரச்சனைகள் வருகின்றன; பாதிப்புகள் ஏற்படுகின்றன. அப்பிரச்னைகளில் ஒன்றுதான் தொற்றுநோய் ஆகும். ஒன்றாம் நூற்றாண்டில், நோய்கள் பல உருவெடுக்கப்படுகின்றன. தொற்றுநோயானது மனிதர்களைத் கைப்பிடியில் வைத்துள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை. தொற்றுநோய் மனிதர்களுக்குப் பல பாதிப்புகளையும் துன்பங்களையும் ஏற்படுத்துகின்றன.
சாதாரண சலி அல்லது காய்ச்சல் என்றாலே நாம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிடுவோம். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவருக்கும் அவர் கொடுக்கும் மருந்துகளுக்கும் பணம் செலுத்துவோம். இதனால், மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. அதோடு, உடல் நிலை மோசமாக இருப்பின், மருத்துவமனையிலேயே தங்க நேரிடும். இதனால், காட்டில், உணவு மற்றும் இன்னும் சிலவற்றிற்கு அதிகமான பணத்தைச் செலவு செய்ய நேரிடும். அதே வேளையில், தொற்றுநோயாக இருப்பின் அருகில் இருப்பவர்களுக்கும் அந்நோய் பரவும். தக்க சமயத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவில்லை அணில் தான் மட்டும் அல்லாது குடும்பத்தினர், சக நண்பர்கள் மற்றும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் அந்நோய் தொற்றுக் கொண்டு பாதிக்கப்படுவதுடன் மருத்துவச் செலவால் திண்டாடுவர்.
அதனை அடுத்து, மனிதர்களாகிய நாம் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் நமது தொழிலும் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் வேலைகளிலும் தடங்கல் ஏற்படும். காரணம், உடல் நலம் குன்றியிருக்கும் வேளையில் நம்மால் முழு கவனமும் ஈடுபாடும் செலுத்த இயலாது. அதோடு, உடல்நலக் குறைப்பாட்டினால் மருந்து உட்கொள்ள நேரிடும். இதனால், நமக்குச் சோர்வாகவும் தூக்கமாகவும் இருக்கும். சோர்வு மற்றும் தூக்கத்தின் காரணத்தால் வேலை செய்ய இயலாததோடு செய்ய வேண்டிய வேலைகளும் காரியங்களும் காலம் கடத்தி தள்ளி வைக்கப்படும். அது மட்டும் அல்லாமல், நாம் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்களும் கல்விக்கூடங்களில் சக ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவர். ஆகவே, நமக்கு நோய் தொற்றுக் கண்டுள்ளது என்பதனைத் தெறிந்தவுடனேயே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று முறையான சிகிச்சையையும் நோய்க்கான மருந்தையும் பெற்றுக் கொண்டு நோய் பரவலைக் குறைக்க வேண்டும்.
அடுத்ததாக,தொற்றுநோயால் நாட்டில் மனிதர்களின் மரண எண்ணிக்கை உயரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. காரணம், நம்மில் சிலர் தன் உடல்நலம் மீது அலட்சியமாக உள்ளனர். தனக்கு நோய் தொற்றுக் கொண்டுள்ளது எனத் தெரிந்தாலும்கூட முறையான வழியை நோக்கிப் பயணிக்கமாட்டார்கள். அலட்சியப்போக்கின் காரணத்தாலும் தாமத சிகிச்சையின் காரணத்தாலும் ஏற்படுகிறது. அதோடு மட்டும் இல்லாமல், தொற்றுநோய்க் கண்ட எந்தவித அறிகுறியும் இருப்பதில்லை. இதனாலும், மரணம் ஏற்படுகிறது என்பதனை ஆணித்தரமாகக் கூறலாம். கோவிட்-19 எனப்படும் தொற்றுநோயை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மரணம் அடைந்தவர்களும் பலர்.
அதோடு, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் நம்மால் சக மக்களுடன் பயணிக்க முடியாது. இன்றைய இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிப்பதற்கு வாகனங்கள் பெருகிவிட்டன. தான் நினைத்த நேரத்திலேயே மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் மற்றும் நீர் மார்க்கமாகவும் பயணிக்கலாம். உதாரணத்திற்கு, வான் மார்க்கமாக வானுர்தியில் பயணிக்கலாம். மகிழுந்து, இருசக்கர வண்டி, பேருந்து, கனவுந்து போன்றவற்றில் தரை மார்க்கமாகவும் பயணிக்கலாம். நீர் மார்கமாகவோ படகிலும் உல்லாசப் பயணக் கப்பலிலும் பயணிக்கலாம். நோய் தொற்றுக் கண்டால் மக்களைப் பார்க்கவும் நேரம் செலவிடவும் முடியாமல் போகிறது.
தொற்றுநோயால் குடும்பத்தில் பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. குடும்பப் பொருளாதாரத்தின் உயர்வும் தாழ்வும் குடும்பத் தலைவர்களாகிய செலவுகளைச் சார்ந்துள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் தன்னால் வேலைக்குச் செல்ல இயலாது. இதனால், வருமானம் குறைந்து பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும். உதாரணமாகக், கோவிட்-19 தொற்றுநோயின்போது பலரும் தன் வேலையை இழந்து திண்டாடினர். சிலர் வீட்டில் இருந்தபடியே கணினி, மடிக்கணினி மற்றும் கைத்தொலைப்பேசியிலேயே இணையம் வாயிலாகத் தங்கள் வேலைகளைச் செய்தனர். வேலையை இழந்தவர்கள் சம்பளம் கிடைக்காமல் திண்டாடினர்.
ஆகவே, தொற்றுநோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் ஐயமில்லை. மனிதர்களாகிய நாம் முடிந்தவரையில் தொற்றுநோய் பரவலைத் தடுக்க வேண்டும். உலக சுகாதார அமைச்சு, ஒவ்வொரு நாட்டு மக்களின் நலனையும் பேணிக் காக்க வேண்டும். மனிதர்கள் தனக்குக் கண்டுள்ள தொற்றுநோயைத் தடுத்து அந்நோயிலிருந்து மீள்வதற்கு மருத்துவர்களின் வழிகாட்டலுடன் தகுந்த மருந்தையும் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனையடுத்து, நூலை பரவலைத் தடுக்க வீட்டிலேயே ஓய்வெடுப்பது அவசியமாகும். தொற்றுநோயைத் தடுப்பதற்கான முறையை நாம் அனைவரும் கையாள வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதனை நாம் உணர வேண்டும்.
Comments