விளையாட்டு
ஓய்வாக இருக்கும் நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கவே விளையாட்டை விளையாடுகிறோம். தனி மனிதராக மட்டுமல்லாமல் இரட்டையராகவோ அல்லது பலரும் சேர்ந்து ஒன்றாகவோ எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். பம்பரம், பட்டம்விடுதல் போன்றவை ஒற்றையராக விளையாடும் விளையாட் டுகளாகும். பல்லாங்குழி, ஆடு புலி போன்ற விளையாட்டுகள் இரட்டையராக விளையாடும் விளையாட்டுகளாகும். பலரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் பல உள்ளன. காற்பந்து, கூடைப்பந்து, கபடி போன்றவை குழு விளையாட்டுகளாகும். பல பிரிவுகளாகப் பிரிக்கப்படும் விளையாட்டினால் பலரும் ஈர்க்கப்பட்டுள்ளனர். விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் நாம் மன அமைதியைப் பெறலாம் என்பது திண்ணம். இன்றைய உலகப் போக்கில் பலருக்கும் பல பிரச்சனைகளால் கவலை ஏற்படுகிறது. இக்கவலையானது, மன உளைச்சலுக்கும் மனக்கவலைக்கும் வித்திடுகிறது. மன உளைச்சலின் காரணமாக மன நோயாளியாக மாறியவர்கள் சிலர் சாலை ஓரங்களில் செல்வதை நாம் பார்த்திருப்போம். நமக்குத் தெரியாமல் பலரும் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமின்றி, மன உளைச்சல் ஒரு மனிதனின் உடல் நலத்திற்கும்...