பணி ஓய்வு உரை (pani ooyvu urai)
பெருமத்திற்குரிய அவைத் தலைவர் அவர்களே, தலைமை ஆசிரியர் திரு.அன்பு அவர்களே, ஆசிரியர்களே, எங்களை பிரிந்து செல்லவிருக்கும் திரு .இராமன் அவர்களே மற்றும் சோதனைகளைச் சாதனையாக மாற்றவிருக்கும் மாணவ மணிகளே. உங்கள் அனைவருக்கும் நமது தமிழ்த் தாயின் பாதம் தொட்டு இனிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் இங்கு குருடியிருப்பதன் காரணம் இன்னும் சிறிது நேரத்தில் நம்மை பிரிந்து செல்லவிருக்கும் நமது அன்பிற்கினிய ஆசிரியர் திரு.இராமன் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துபசரிப்பு ஆகும்.
நாம் இவரின் சிறப்புகளைக் காண்போம் வாரீர். இவர் முப்பது ஆண்டு காலமாக இப்பள்ளியில் பணி புரிந்துள்ளார்.இவர் ஒன்று "பேதா"வின் வகுப்பாசிரியர் ஆவார். இவர் நம் பள்ளிக்கு பல உதவிகளைச் செய்துள்ளார். நம் பள்ளியில் படிவம் மூன்று (PT 3) மற்றும் படிவம் ஐந்து (SPM) என்ற இரு படிவ மாணவர்களும் தமிழ் மொழிப் பாடத்தில் அதிகத் தேர்ச்சி அடையச் செய்ய துணைப்புரிந்தவர் இவர்தான். இதனால், இப்பள்ளியில் தமிழ் மொழி பாடத்தில் அதிகத் தேர்ச்சி அடையும் மாணவர்கள் அதிகம் உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், நம் பள்ளியில் படிவம் மூன்று மற்றும் படிவம் ஐந்து மாணவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்துக் கொடுத்தது அவர்தான். நம் பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும் தனது அதிகமான உழைப்புகளைக் கூறினால் அளவே இல்லை. ஏழை மாணவர்களுக்கு பண உதவியும் செய்துள்ளார். இதற்காக, அம்மாணவர்களின் பெற்றோர்கள் இவருக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்க வேண்டும்.
திரு.இராமனிடம் ஒரு குறையும் கண்டுப்பிடிக்க இயலாது. காரணம் மிகவும் தூய்மையான மனம் உடையவர். இவரைப் பற்றிக் கூறிக் கொண்டே போனால் நீரம் பந்தைப் போல உருண்டோடும். இத்துடன் ஒரு கவிதையுடன் என் உரையை முடித்துக்கொள்ள அனுமதி தாருங்கள்.
சந்திரனிடம் ஒளி மறைந்துள்ளது,
சூரியனிடம் வெப்பம் மறைந்துள்ளது,
பாலில் நெய் மறைந்துள்ளது,
மணியில் ஒலி மறைந்துள்ளது,
பூவில் மனம் மறைந்துள்ளது,
எங்களின், அன்பு, பாசம், நேசம் அனைத்தும் உன்னிடம் மறைந்துள்ளது,
இறுதியில், எங்கள் உள்ளத்தில் நீ மறைந்துள்ளாய்!
இத்துடன் நான் படிக்க நேரமும் அனுமதியும் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.
Comments