அன்பு (Anbu)
அன்பு என்பதில் முதல் இடம் வகிப்பதில் அன்னை
தெரேசா. அன்பு என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய நல்ல பண்பாகும். அன்பினால்
சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்றால் அது மிகையாகாது. உலகில் சிறந்தது அன்பு.
ஒருவரின்
மனம் நெகிழ்ந்து வெளிப்படும் உணர்வு அன்பாகும். தன்னையே அறியாமல் ஒருவரின் மீது
எழும் ஒரு விதமான உணர்வுதான் அன்பு. அது மட்டும் இல்லாமல், தன்னலம் கருதாமல் பிறர்
நலம் பேணுவதும் அன்பாகும். உதாரணத்திற்கு, தெருவின் ஓரத்தில் காயமாகவும்
அழுக்காகவும் இருக்கும் ஒரு நாயின் உயிரைக் காப்பாற்றுவதும் அன்பு.
அதோடு,
ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு நிலவுகிறது. குடும்பத்தில் பிள்ளைகளின் நலனுக்காகப்
பாடுபடும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் அன்பு நிலவுகின்றது. இது
போன்ற பெற்றோர்கள், பிறர் உயிரைத் தன்னுயிர் போலக் காக்கின்றனர். அது மட்டும்
இல்லாமல், இவர்கள் சமுதாய வளர்ச்சி மீது அன்பும் அக்கறையும் காட்டும்படி
உயர்கின்றனர்.
அடுத்து,
உண்மையும் நேர்மையும் அன்புக்கு இலக்கணம் ஆகும். உண்மையாகவும் நேர்மையாகவும்
அன்பாகவும் பண்புடன் இருப்பவர்கள் உறவுகளுக்காகத் தியாகம் செய்யத் துணிவார்கள்.
இதனால், குடும்ப ஒற்றுமை வலுப்படும்.
அன்பு
என்பது இரு நண்பர்களுக்கிடையே பள்ளியிலும் நிலவுகிறது. இந்த அன்பு, எந்தச்
சூழலிலும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் ஒத்த சிந்தனையுடன் நட்பு கொண்டு
இணைபிரியாமல் அன்பு பாராட்டுவதற்கு உதவுகிறது.
எனவே, நாம் ஒவ்வொருவருக்கும் அன்பு என்னும் நற்பண்பு இருக்க வேண்டியது அவசியம். நமது வாழ்க்கையில் அம்மாவும் அப்பாவும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அன்பும் முக்கியம்.
Comments