அதிகாரப்பூர்வக் கடிதம் – மொழிக் கழகம் (athigaarappoorva kaditham)
லோகலட்சிமி த\பெ சுரேஷ்குமார்
எண் 140, ஜாலான் ஏக்கார் 1\4,
பண்டார் ஏக்கார்,
71200, ரந்தாவ்,
நெகிரி செம்பிலான்._____________________________________________________________
நூலகப்
பொறுப்பாளர்,
மலாயாப்
பல்கலைக்கழக நூலகம்,
லெம்ப
பந்தாய்,
50630 –
கோலாலம்பூர். 7 ஏப்ரல் 2019
ஐயா,
தமிழ்மொழி
கழகத்தின் கல்விச் சுற்றலா.
வணக்கம், ஐயா.
நான் இக்கடிதத்தை எழுதுவதன் நோக்கம் ரந்தாவ் இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகம்
ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மேற்கொள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்
நூலகத்திற்கு வரவுள்ளோம். அதோடு, மாணவர்களுக்குத் தமிழ்மொழியின் மீதுள்ள
ஆர்வத்தையும் பற்றையும் மேம்படுத்தவே இக்கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.
நான் எனது மாணவர்களுடன் அங்கு வருகை புரிய அனுமதி பெறவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
2. இந்தக் கல்விச் சுற்றுலா கீழ்க்கண்ட
விபரங்களின்படி நடைபெற திட்டமிட்டுள்ளோம்.
திகதி : 01.07.2019
நேரம் : 08.00 a.m – 04.00 p.m
நாள் : வியாழன்
இடம் : நூல் நிலையம், மலாயாப் பல்கலைக்கழகம்
இந்தக்
கல்விச் சுற்றுலாவில், நாற்பது மாணவர்களும் நான்கு ஆசிரியர்களும் கலந்து
கொள்ளவுள்ளனர். மாணவர்கட் அனைவரும் படிவம் நான்கு மற்றும் படிவம் ஐந்தில் பயிலும்
மாணவர்கள்.
3. தங்கள் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கழகத்தின்
மூலம் நடைபெற்ற நடவடிக்கைகளை எடுத்துக் கூற ஓர் அதிகாரியைத் தயார்படுத்திக் கொடுங்கள்.
அதோடு, தங்கள் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ள புத்தகங்களை விவரித்துக் கூறவும்
ஓர் அதிகாரியைத் தயார் செய்ய வேண்டும்.
4. நாங்கள் தங்களது மலாயாப் பல்கலைக்கழகத்தின்
தமிழ் நாலகத்திற்க்குக் கல்விச் சுற்றுலா மேற்கொள்ள அனுமதி வழங்குவீர்கள் என்று
பெரிதும் நம்புகிறோம். நன்றி.
இப்படிக்கு,
S.Logalachimi
லோகலட்சிமி த/ பெ சுரேஷ்குமார்,
செயலாளர்,
தமிழ்மொழிக் கழகம்,
ரந்தாவ் இடைநிலைப்பள்ளி.
Comments