அதிகாரப்பூர்வமற்ற கடிதம் – மரம் நடுவோம். (athigaarepoorvamattra kaditham - surat kiriman tidak rasmi)

 



எண் 15, ஜாலான் பைடுரி 5,

                                              தாமான் பைடுரி,     

                                42700 பந்திங்,

                                            சிலாங்கூர் டாருள் ஏசான்.

                               10 மே 2017

அன்புத் தங்கை கனிமொழிக்கு,

வணக்கம்.

     இங்கு நம் பெற்றோர், உடன் பிறப்புகள் அனைவரும் நலன். நீயும் அங்கு நலமாக இருக்க இறைவனை இறைஞ்சுகின்றேன். அன்புத் தங்கையே, சென்ற வாரம் நீ அனுப்பிய கடிதத்தில் நம் வசிப்பிடத்தில் இயங்கும் ருக்குன் தெத்தாங்கா பற்றிய விவரங்களையும் நிழற்படங்களையும் கேட்டிருந்தாய். நல்லவேளையாக என்னிடம் சில நிழற்படங்கள் உள்ளன.

தங்கையே,

     நம் வசிப்பிடத்தில் உள்ள ருக்குன் தெத்தாங்கா மிகவும் சிறப்பாக இயங்குகின்றது. நம் அப்பாவும் அதில் ஓர் அங்கத்தினர் என்று உனக்கும் தெரியுமே! இப்பகுதி வாழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ருக்குன் தெத்தாங்கா உறுப்பினர்கள் இயங்குகின்றனர்.

     இவ்வியக்கத்தின் மூலம் நம் வசிப்பிடத்தில் பசிமை அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். இயற்கை அழகு கூடியுள்ளது. மரங்கள் நடும் செயல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

     நடைபாதை நெடுக்கிளும் பூச்செடிகளும் நிழல் தரும் நடப்பட்டுப் பசுமை நிறைந்த பூங்கா போல நம் வசிப்பிடங்கள் காட்ச்சியளிக்கின்றன. மனதிற்கு அமைதியும் கண்களுக்குக் குளிர்ச்சியையும் அளிக்கின்றன.

     இக்கடிதத்தின் ருக்குன் தெத்தாங்கா இயக்கத்தின்கீழ் நடைபெற்ற மரம் நடும் நடவடிக்கைகளின் நிழர்படங்களையும் இணைத்து அனுப்புகிறேன். உன் திரட்டேடு நடவடிக்கைக்கு இப்படம் நிச்சயம் தேவைப்படும் என்று நம்புகிறேன்.

     சரி தங்கையே, இத்துடன் இம்மடலை முடித்துக் கொள்கிறேன். உனது பதில் மடலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். மீண்டும் அடுத்த மடலில் சந்திப்போம். 

 

நன்றி.                                                அன்புடன் அண்ணன்,

                                                                                  ம.மதியழகன்



Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)