இனிப்பு - சிறுகதை

   


     நந்தினிக்கு இனிப்பு சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் அம்மா வாங்கி தந்த லட்டுகளைச் சாப்பிட்டு விட்டு மீதியைத் தனது அறையிலிருந்து மேசை மீது வைத்தாள். சிறிது நேறத்தில் எறும்புகள் மேசை மீது இருந்த லட்டைத் தேடி வந்து வரிசையாகக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் செல்ல ஆரம்பித்தன. இதைப் பார்த்த நந்தினி லட்டு வைத்திருந்த பையை வேறு இடத்திற்கு மாற்றி வைத்தாள்.

    சிறிது நேரம் கழித்து அங்கேயும் எறும்புகள் வர ஆரம்பித்தன. எறும்புகளின் தொல்லை தாங்க முடியாமல் லட்டு வைத்திருந்த பையை வேறு இடத்திற்கு மாற்றி  வைத்து, எறும்பு வராமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்தைத் தூவினால். சிறிது நேரத்தில் அங்கு லைட்டைத் தேடி வந்த எறும்புகளின் சில பரிதாபமாக இறந்து போயின. இதைப் பார்த்த அவள், இனி எறும்புகள் லைட்டைத் தேடி வராது  என்று நினைத்தாள். சிறிது நேரம் கழித்து, சில எறும்புகள் வரிசையாக வந்து இறந்து போன எறும்புகளின் உடலைத் தூக்கிச் சென்றன.

    மேலும் சில எறும்புகள் வரிசையாக வேறு வழியாக லட்டு இருக்கும் இடத்தை நோக்கி வர ஆரம்பித்தன. அதில் முதலாவதாக வரும் எறும்பை நந்தினி உற்றுப் பார்த்து "நாங்க எத்தன பேரை இழந்தாலும் சரி. நாங்கள் பயந்து பின் வாங்க மாட்டோம். எங்களோட குறிக்கோள் இனிப்பை அடையுறது தான், அது வரை ஓய மாட்டோம்." என்று சொல்வது போல இருந்தது.

Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)