நான் யார்?
இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? என்கிற விழிப்பு நம்முள் தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போக வேண்டும்? எப்படிப் போகப் போகிறோம்? என தெளிவு பிறந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
அமெரிக்க அதிபராக விளங்கியவர் ஜான் எஃப் கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். அது போல அன்று அங்கு வந்திருந்த ஒரு மாணவனின் கன்னடத்தைத் தட்டி "உன் எதிர்கால ஆசை என்ன" எனக் கேட்டார் கென்னடி. அதற்கு அம்மாணவன் "நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் இலட்சியம்," என்றான். விழிகளை உயர்த்திவிட்டு "குட்" என வாழ்த்தியபடி கென்னடி நகர்ந்தார். பின்னாளில் தான் சொன்னபடியே அமெரிக்காவின் அதிபரானான் அந்தச் சிறுவன். அவர் வேறு யாருமல்ல. உலகப் புகழ் பெற்ற பில் கிளிண்டன் தான் அவர். அவர் எண்ணம் வெறும் ஆசையோ அல்லது கற்பனையோ அல்ல. தீர்க்கமான முடிவு. அதனால் அது நடந்துவிட்டது. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.
Comments