Covid-19 : விடுமுறையில் நான் (vidumuraiyil naan >covid-19 information<)

 

    


    2020ஆம் ஆண்டு கோவிட்-19 எனும் புதிய நோய் மலேசியாவில் தொற்று கண்டது. இது மிகவும் கொடுமை மிகுந்த நோய் ஆகும். 1720, 1820, 1920ஆம் ஆண்டுகளில் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய நோய்கள் உருவாகின. அதே போல கடந்த ஆண்டும் கோவிட்-19 புதிய தொற்றாகும். ஒரு நபரிடமிருந்து மற்றவர்களுக்குச் சுலபமாக இந்நோய் பரவுமே. ஜாதி, மதம், பேதம் என எதையும் பாராமல் இந்த உலகையே குலுக்குகிறது.

     கோவிட்-19 எனும் இக்கொடிய நோய் சீன நாட்டில் வுஹான் எனும் இடத்திலிருந்து பெய்ஜிங், ஷென்சென், அத்தாலி, அமெரிக்கா, என உலகம் முழுவதும் பரவியது. கூட்டமான இடத்திலோ அல்லது நெருக்கமான இடத்திலோ அல்லது இடைவெளி இல்லாமல் பேசிக் கொண்டிருக்கும் இடத்திலோ அந்நோய் பரவுகிறது. சீனாவில் தோன்றிய இந்நோய் மருத்துவர் ஜாங் ஜிக்சியன் சிகிச்சை அளித்தார். அதோடு, டிசம்பர் இருபத்து ஏழாம் திகதி அன்று வுஹான் ஜியாங்கன் சிடிசிக்குத் தகவல் கொடுத்தார். இவர் மூலம் அனைத்து மருத்துவர்களுக்கும் இந்நோய் பற்றி தெரிவிக்கப்பட்டது. மார்ச் பத்தொன்பது மற்றும் இருபத்து ஆறாம் திகதிகளில் இத்தாலி மற்றும் அமெரிகாவில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டன.

     கோவிட்-19 தொற்றினால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன. இத்தொற்று கண்டவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, இருமல், தசை வலி, தொண்டை புண், சுவாசக் கஷ்டம், தும்மல் என அறிகுறிகள் தெரியும். ஆனால், இந்நோய் தொற்றுக்கண்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகே அவ்வறிகுறிகள் காணப்படும். இத்தொற்றிலிருந்து மீள்வது கடினமானதாகும். ஒரு நபருக்குத் தொற்று கண்டுவிட்டது எனில் கூட்டமான அல்லது நெரிசலான இடங்களில் அந்நபரின் மூலம் அவரைச் சுற்றி இருக்கும் ஐந்து பேருக்கு இந்நோய் பரவும். இத்தொற்று கண்டவர்களுக்குச் சுவாசிப்பதில் சிரமம் இருக்குமேயானால், மருத்துவமனையில் உயிர்வளி பொருத்தப்படும்.

     இத்தொற்றிலிருந்து மீள வேண்டும் எனில் நாம் பல வழிமுறைகளைக் கையாள வேண்டும். நாம் எங்கேயாவது சென்று வீடு திரும்பிய பின்னர் வழலைக்கட்டியைப் பயன்படுத்தி தூய்மையாகக் குளிக்க வேண்டும். கடை, பேரங்காடி என அனைத்து இடங்களிலும் தயார் செய்து வைத்துள்ள கைத்தூய்மியைப்(sanitizer) பயன்படுத்த வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளைக் குறைந்தது இருபது வினாடிகளுக்குக் கழுவ வேண்டும். தூய்மையற்ற கைகளைக் கொண்டு வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடக் கூடாது காரணம் தூய்மையற்ற கைகளில் வைரஸ் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சுத்தம் சுகம் தரும் என்பது போல நாமும் நமது சுற்றுச்சூழளும் சுத்தமாக இருப்பதை உருதி செய்துக் கொள்ள வேண்டும்.

     ஆகவே, பொது மக்களாகிய நாம் கோவிட்-19 தொற்றை ஒழிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி நடந்துக் கொள்ள வேண்டும். 3s எனப்படுவது கூட்டமான இடங்கள் (tempat sesak), நெரிசலான இடங்கள்(tempat sempit) மற்றும் இடைவெளியற்ற தொடர்பு(sembang berdekatan) ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அது மட்டும் இல்லாமல், 3wஐ அமலுக்குக் கொண்டு வர வேண்டும். 3w  எனப்படுவது கைகளைக் கழுவுதல்(wash hands), முகக்கவசம் அணிதல்(wear mask) மற்றும் எச்சரிக்கையாக இருத்தல்(warn)ஆகியவற்றைக் கடைப்பிடித்தல் ஆகும். அரசாங்க உத்தரவின் படி நாம் ஒருவரிடம் பேசும் போது குறைந்தது ஒரு மீட்டர் தூரத்தில் நிற்க வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது போல நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்க உத்தரவைப் பின்பற்றி நடந்தால் கோவிட்-19 தொற்றை விரைவில் ஒழிக்க முடியும்.

Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)