இணையத்தினால் ஏற்படும் நன்மைகள் (inaiyathinal erpadum nanmaigal)
அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல தொழில்நுட்பம் இன்றி இவ்வுலகம் இயங்காது என கூறலாம்.இன்றைய அறிவியல்
தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
ஆகையால், இணையத்தினால் நமக்கு அதிக நன்மையே ஏற்படுகின்றன.
இணையத்தின் வழி நாம் கைவிரல்
நுனியில் பல தகவல்களை அறிந்துக் கொள்ளலாம். நாம் இணையத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டுச் செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். மேலும், உலக மக்களாகிய
நாம் பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இதனால், கிணற்றுத் தவளை போல் இல்லாமல்
தகவல் அறிந்த சமுதாயமாகத் திகழலாம்.
மேலும், இணையத்தைப் பயன்படுத்தி நாம்
நமது நண்பர்களோடு தொடர்புக் கொள்ளலாம். அரட்டையடித்தல், முகநூல் போன்ற சமூக
வளைத்தளங்களைப் பயன்படுத்தி நாம் நட்புறவை வளர்த்துக் கொள்ளலாம். அதோடு
மட்டுமல்லாமல், நாம் வெளிநாட்டு நண்பர்களோடு தொடர்புக் கொள்ளவும் இணையம் உதவி
புரிகின்றது.
தொடர்ந்து, இணையத்தின் வழி மாணவர்கள் ‘மெய்நிகர் கற்றல்’ சூழலில் கல்வியைக் கற்கலாம். மாணவர்கள்,
ஆசிரியர் கொடுக்கும் இடுபணியைச் செய்து முடிக்கலாம். ஆசிரியர் துணையின்றி
மாணவர்கள் சுயமாகக் கற்றல் கற்பித்தலில் ஈடுபட இயலும். இதனால், மாணவர்களின்
தொழில்நுட்பத் திறனையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
அடத்து,
இணையத்தைப் பயன்படுத்தினால் நமது மன அழுத்தத்தைப் போக்கிக் கொண்டு ஆரோக்கியமாக
வாழலாம். இணையத்தின் வழி ஒளிபரப்பப்படும் பாடல்கள், நகைச்சுவை போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளை
பார்ப்பதனால் மனமகிழ்வு ஏற்படுகின்றது. மேலும், வாசிக்க சிரமப்படுபவர்கள்
இணையத்திலுள்ள கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை வாசிப்பதனால் வாசிப்புத் திறனும்
மேம்படுகின்றது. காலம் பொன்னானது என்பதற்கேற்ப நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவிட
இணையம் துணையாக உள்ளது.
இறுதியாக,
இணையத்தினால் நாம் அதிக நன்மையே அடைகின்றோம். எனவே, இந்த இருபத்து ஒன்றாம்
நூற்றாண்டில் நாம் அவசியம் இணையத்தின் பயன்பாட்டை அறிந்து அதில் வல்லமை பெற
வேண்டும்.
Comments
Nanri Makale