தொலைக்காட்சி பார்ப்பதனால் நன்மையே அதிகம். (Kebaikkan menonton televisyen)
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தொலைக்காட்சி
நம் அன்றாட தேவைகளுள் ஒன்றாகும். இன்று தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே இல்லை என
உறுதியாகக் கூறலாம். தகவல் தொடர்புச் சாதனங்களுள் தொலைக்காட்சியும் ஒன்றாகும்.
தொலைக்காட்சி பார்ப்பதனால் அதிக நன்மையே விளைகின்றன.
தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்படும் செய்திகளைப் பார்ப்பதனால் நாம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள
முடியும். நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் தற்கால செய்திகளை நாம் அறிந்து
கொள்ள முடியும். இதனால் மாணவர்கள் கிணற்றுத் தவளை போல இல்லாமல் தகவல் அறிந்த
சமுதாயமாகத் திகழலாம்.
அடுத்து,
தொலைக்காட்சி பார்ப்பதனால் மாணவர்கள் தங்கள் கற்றல் கற்பித்தலை மேம்படுத்திக்
கொள்ளலாம். தொலைக்காட்சியில் உள்ள கல்வி அலைவரிசைகளைப் பார்ப்பதனால் மாணவர்கள்
சுயமாகப் பாடத்தை மீள்பார்வை செய்ய முடியும். மாணவர்கள் கற்றவற்றை எளிதில்
நினைவில் வைத்துக் கொள்ள தொலைக்காட்சி கைக் கொடுக்கின்றது.
அதோடுமட்டுமல்லாமல்,
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் நாமா நேரத்தையும்
பணத்தையும் சிக்கனம் செய்யலாம். இதனால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்ல
வேண்டியதில்லை. வீட்டிலேயே இருந்து கொண்டு அந்நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
தொலைக்காட்சியைப் பார்ப்பதனால் நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சுற்றுலா
தளங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். சுற்றுலா செல்ல முடியாத மாணவர்கள்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பலவகையான இடங்களைக் கண்டு பயன்பெறலாம்.
மேலும்,
தொலைக்காட்சியைப் பார்ப்பதனால் மன அழுத்தத்தைப் போக்கி ஆரோக்கியமாக வாழலாம்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், நகைச்சுவை
நிகழ்ச்சிகள், திரைப்படம் போன்றவற்றைப் பார்ப்பதனால் மன மகிழ்வு ஏற்படும். காலம்
பொன்னானது என்பற்கேற்ப தொலைக்காட்சி பார்ப்பதை ஒரு நல்ல பொழுது போக்காகவும்
கொள்ளலாம்.
இறுதியாக,
தொலைக்காட்சி பார்ப்பதனால் அதிகம் நன்மையே நன்மையே விளைகின்றன என்பது திண்ணம்.
எனவே, தொலைக்காட்சியில ஒளிபரப்பப்படும் பயனுள்ள நிகழ்ச்சிகளைக் கண்டு பயன்
அடைவோம்.
Comments