மலேசியாவில் பொதுப் போக்குவரத்து (Malaysiavil pothu pokkuvarathu)


         பொதுப் போக்குவரத்து இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமா ஒன்றாகக் கருதப்படுகின்றது. நாம் தரை மார்க்கமாகவும் நீர் மார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாகவும் பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தி வருகின்றோம்.

     நமது அன்றாட வாழ்வில் பொதுப் பேருந்து, வாடகை வண்டி, அதிவிரைவு இரயில், தொடர்வண்டி, முச்சக்கர வண்டி, மூடுந்து போன்ற தரைப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தி வருகின்றோம். குறிப்பாகப் பட்டணத்தில் வாழும் மக்களுக்கு இம்முறையிலான போக்குவரத்து குறைந்த விலையில் நிறைந்த சேவையை வழங்கி வருகிறது.

     நீர்வழிப் போக்குவரத்தென்பது கப்பல், ஓடையிழுவை, நீர்மூகிக் கப்பல், படகு போன்றவற்றின் மூலம் பயணிப்பதாகும். மலேசியாவில் பங்கோர் தீவு, புலாவ் பெசார், பினாங்கு தீவு, லங்காவி தீவு போன்ற தீவுப் பகுதிகளுக்குப் பயணிப்பவர்கள் நீர்ப் போக்குவரத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். இம்முறையிலான போக்குவரத்தின் வாயிலாகக் குறிப்பாகக் கப்பலில் ஒரே நேரத்தில் அதிகமானோர் பயணிக்க முடியும். மேலும், ஓடையிழுவையில் (ஃபெர்ரி) வாகனங்களையும் ஏற்றிச் செல்லலாம். எடை அதிகமாக உள்ள பொருள்களை அதிகளவில் ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்ல முடியும். இந்நீர்ப் போக்குவரத்து முறை பல நூற்றாண்டுகளாக வணிகத்துறையில் சேவையாற்றி வருகின்றது.

     உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்ய ஆகாயப் போக்குவரத்து முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வெளிநாடுகளுக்குக் குறைந்த விலையில் குறுகிய நேரத்தில் செல்ல முடிகின்றது. மலேசியாவில் உலகத் தரத்திலான அதிநவீன விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டிருப்பது நமது நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்குச் சான்றாகும்.

     பொதுப் போக்குவரத்துத் தறையின் வளர்ச்சியால் நாட்டின் பொருளாதாரம் உயர்கின்றது; வேலை வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. மக்கள் மன அழுத்தமின்றிச் செயல்பட முடிகின்றது. எனவே, மலேசிய மக்கள் பொதுப் போக்குவரத்து வசதிகளை முறையாகப் பயன்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும்.



Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)