நான் பணக்காரரானால் (Naan panakkaararaanaal)

    



    "சின்ன சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை," எனும் சினிமா பாடல் நாம் அனைவரும் கேட்டிருப்போம். அனைவருக்கும் சிறு வயதிலிருந்தே ஆசைகள் பல இருக்கும்.  எனக்கும் ஓர் ஆசை உள்ளது. அது என்னவென்றால் நான் ஒரு பணக்காரராக வேண்டும். நான் பணக்காரரானால் பலருக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்ய முடியும்.
    நான் பணக்காரரானால் முதலில் ஏழைகளுக்கு உதவுவேன். ஏழை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவேன். பள்ளிச் செலவுகளை நானே பூர்த்தி செய்வேன். ஏழை மக்களுக்கு வீட்டுச் செலவுக்காக பணம் கொடுத்து உதவுவேன். இதனால்,பலர் வாழ்க்கை நன்மை அடையும். அது மட்டுமல்லாமல், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயரச் செய்வேன். 
    அடுத்ததாக, நான் பணக்காரரானால் இலவச மருத்துவமனை ஒன்று காட்டுவேன்.அங்கு ஊர் மக்கள் அனைவரும் இலவசமாகச் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். இதனால் மக்கள் உடனுக்குடன் சிகிச்சை பெறுகின்றனர். நோய் நொடியின்றி நீண்ட நாள் உயிர் வாழ்வர். அந்த மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருத்துவர்களையும் தாதியர்களையும் பாணியாட்களையும் சேர்த்துக் கொள்வேன். அங்கு பணிபுரிபவர்கள் அன்புடனும் பண்புடனும் இருக்கச் செய்திடுவேன்.
    அதோடு,நான் பணக்காரரானால் இலவச பள்ளிக்கூடம் காட்டுவேன். அங்கு பல மாணவர்கள் இலவசமாகப் படிப்பதற்கு வழிவகுப்பேன. மாணவர்களின் சிற்றுண்டி நேரத்தின் போது இலவசமாகச் சிற்றுண்டி கொடுக்கும்படி செய்வேன். மாணவர்கள் உண்ணும் சிற்றுண்டி சத்தானது என்பதை உறுதி செய்து கொள்வேன். இதனால், மாணவர்கள் தெம்பாகக் கற்றல் கற்பிக்கும் நேரத்தைத் தொடங்கலாம்.
    அதற்கு அடுத்ததாக, நான் அனைவருக்கும் வாரத்தில் இரண்டு முறை இலவசமாக உணவு கொடுப்பேன். அது மட்டுமின்றி, நான் அனைவருக்கும் வித விதமான மற்றும் சத்தான உணவுகளைக் கொடுப்பேன். இதனால், அனைவரும் வயிறு நிறைந்து மனம் நிறைவர்.
    ஆகவே, நான் பணக்காரரானால் மக்களுக்கு உதவுவேன். எனது ஆசை நிறைவேற நான் கடவுளைப் பிரார்த்திக்கின்றேன்.
    



Comments

Unknown said…
Arputamaana kathurai

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.