நீரின் பயன்



    இப்பூமி பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவையே பஞ்சபூதங்கள் என்போம். இவற்றில் நீர் உயிரினங்களுக்கு மிக அவசியமான ஒன்றாகும். நீர்  கடல்,ஆறு, குட்டை, ஏறி, கிணறு, குளம் போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது. நீரின்றி அமையாது உலகு என்பார்கள்.

    நீர் மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். குளிப்பதற்கு, குடிப்பதற்கு, சமைப்பதற்கு, துவைப்பதற்கு, கழுவுவதற்கு என பல வேலைகளை செய்ய நீர் பயன்படுகிறது. நீர் இல்லாவிடில் இவ்வேலைகள் தடைப்படும். அதுமட்டுமின்றி வெயில் காலங்களில் மனிதர்கள் அதிக அளவில் நீர் அருந்தாவிடில் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்களுக்கும் அருந்த நீர் அவசியம்.

    பயிர்கள் செழித்து வளரவும் நீர் மிக அவசியமாக இருக்கின்றது. விவசாயம் ஒவ்வொரு நாட்டிற்கும் அடிப்படையான ஒன்றாகும். மனிதர்கள் உயிர் வாழ தாவரங்களும் பயிர்களும் தேவை. அந்தத் தாவரங்களும் பயிர்களும்  செழித்திட நீர் அவசியம். நீர் இல்ல வறண்ட பூமியில் பயிர்கள் வளராது. எனவே, நீரை எப்போதும் சேமித்து வைக்கின்றனர்.

    மின்சார உற்பத்திக்கும் நீர் அவசியம். மலை நீரையும் அருவிகளிலிருந்து ஓடி வரும் நீரையும் நீர்த்தேக்கங்களில் சேகரித்து வைத்திருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர். மின்சாரம் இல்லையென்றால் மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும். அதே மின்சாரம் உருவாவதற்கு மூலக காரணம் நீர் என்றால் அது மிகையாகாது. 

    போக்குவரத்து நீரின் பயங்களுள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நீர் நிலைகள் போக்குவரத்துக்கு வசதியாக அமைகின்றன. ஏறி, ஆறு, கடல் போன்றவற்றின் மூலம் மக்கள் வேறு இடத்திற்கும் நாட்டிற்கும் பயணம் செய்ய இயல்கிறது. மேலும், பொருள்களை ஏற்றி வரும் கப்பல்களும் கடலில்தான் பயணம்  செய்கின்றன. ஆகவே, பல நடவடிக்கைகளுக்கு நீர் போக்குவரத்தாகவும் பயன்படுகிறது.

    எனவே, நீர் இல்லாவிடில் இவ்வுலகம் வறண்ட பூமியாகிவிடும் என்பதை யாரும் மறக்க முடியாது. ஆகவே, நீராச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நீரைச் சேமிக்கு பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

Comments

Unknown said…
Very nice😊
Unknown said…
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.