வாசிப்பின் அவசியம்



    'ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்' என்பது உலகநீதி. உலகில் நடக்கும் தகவல்களைப் பெற நாம் பல்வேரு நூல்களை ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டியது அவசியமாகிறது.
    ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். அத்துடன் அவற்றின் பொருளை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது.
    மொழி வளத்தைப் பேருக்கும். அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். அறிவியல், மொழி, சரித்திரம், விளையாட்டு, அரசியல் என பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் நாம் தகவல் அறிந்த சமுதாயமாக மாற வாசிப்புத் துணைப்புரிகிறது.
    இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வியந்திர வாழ்க்கையிலிருந்து மீண்டு மனமகிழ்வு பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது. வாசிப்பைச் சிறந்த பொழுதுபோக்காகக் கொள்வது அவசியம். கதை, கட்டுரை, கவிதை, செய்யுள் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அவற்றின் சுவையை உணர்ந்து இரசிப்பது மனமகிழ்ச்சியைத் தருகிறது.
    சொந்தமாகக் கதை, கவிதை கட்டுரை எழுத விரும்புகிறவர்கள் முதலில் அவை தொடர்பான நூல்களைப் படித்து அறிய வேண்டும். அப்போதுதான் சொந்தப படைப்புகளைப்  படைக்கும்போது அவை தரமானவையாக இருக்கும். பல தகவல்களைத் தன்னுடைய படைப்புகளில் புகுத்த முடியும்.

'தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்குக் 
கற்றனைத் தூறும் அறிவு'                                              

    எனும் குறலுக்கேற்ப எந்த அளவிற்குத் தோண்டுகின்றோமோ அதே அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊரும். அதுபோல எந்த அளவுக்கு வாசிக்கிறோமோ அந்த அளவிற்கு அறிவு வளரும். எனவே, பல நூல்களை வாசித்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.