நேர்காணல் என்றால் என்ன?
>> நேர்காணல் என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெரும் ஓர் உரையாடல் ஆகும். >> நேர்காணல் என்பது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒருவரும், பதில்கள் தருபவர் ஒருவருமாக ஒன்றுக்கு ஒன்று உரையாடலாகவே இருக்கும். >> நேர்காணல் பல்வேறு துறையில் பல்வேறு வகையில் காணப்படுகின்றன. செய்திக்கு மூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகும் ஒருவரை நேர்காணல் கொள்வது செய்தி திரட்டுவதில் முக்கியமான ஒன்றாகும். அதுமட்டுமின்றி செய்தியாளராக இருப்பவர் நேர்காணல் கொள்வதில் திறனுடையவராக இருக்க வேண்டும். >> நேர்காணல் இல்லாமல் செய்திகள் இல்லை எனுமளவிற்கு செய்திகளில் நேர்காணல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. >> நேர்காணல் என்பது ஒருவரோடு தொடர்பு கொண்டு அவர் மூலமாக விவரங்களைக் கேட்டுப் பெறுவதாகும். இது நேரிலோ, தொலைப்பேசி வழியாகவோ, கடிதம் வழியாகவோ அல்லது புதிய தகவல் தொடர்பு சாதன வழியாகவோ இருக்கலாம். >> நேர்காணலின் நன்மைகள்: # புதிய கட்டுரைக் கருத்துகளைப் பெறலாம். # அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் அறிய துணைப் புரியும். # செய்திகளை உருவாக்கலாம் # பல்வேறு கருத்துக்கள் வெளிவர வாய்ப்பாயிர...