கடற்கரை



     உலகில் கண்களைக் கவரும் இடங்கள் பல நமக்குத் தெரியாமல் உள்ளன. ஆனால், நாம் அனைவருக்கும் தெரிந்த கண் கவர் இடங்களில் கடற்கரையும் ஒன்று எனலாம். கடற்கரையைப் பற்றி அறியாதவர் யாவரும் இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடற்கரைக்குச் செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். உலகில் அனைத்து இடங்களிலும் கடற்கரை இருக்கின்றது. கடற்கரைக்குச் செல்வதனால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன.

    நாம் கடற்கரைக்குச் செல்வதால் சுத்தமான உயிர்வளியைச் சுவாசிக்க முடிகின்றது. காரணம் நாம் வழக்கமாக சுவாசிக்கும் காற்றைவிட கடற்கரையில் சுவாசிக்கும் காற்றில்  அதிகமாக உள்ளது. நாம் கடற்கரையில் சுவாசிக்கும் காற்று, நம்மை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அது மட்டுமல்லாது, சுத்தமான உயிர்வளியைச் சுவாசிப்பதனால் இரத்த ஓட்டம் சீர் அடையும். அதனால், நாம் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழலாம். அதோடு, கடற்கரை காற்றில் உயிர்வளியின் அளவு அதிகமாக இருப்பதனால்தான் சிலர் கடற்கரை ஓரத்தில் மெது ஓட்டம் ஓடுகின்றனர், உடற்பயிற்சி செய்கின்றனர். ஆகவே, கடற்கரைக்குச் செல்வதனால் உயிர்வளியைச் சுவாசித்து நன்மையைப் பெறுகின்றோம். 

    அடுத்ததாக, நாம் குடும்பத்துடன் கடற்கரை செல்வதன்வழி குடும்ப உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்பதில் ஐயமில்லை. நாம் வீட்டில் இருக்கும் நேரத்தில் அனைவரும் தான் உண்டு தான் வேலை உண்டு என்றிருப்போம். குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்றோமேயானால் ஒருவரிடம் ஒருவர் மனம்விட்டுப் பேசலாம். குடும்பத்தில் ஒவ்வொருவரின் குறைநிறைகளை கவலைகளையும் பிரச்சனைகளையும் பேசிக் கலந்துரையாடலாம். இதனால், குடும்பத்தில் ஏற்படவிருக்கும் சிறு சண்டையாக இருப்பினும் அச்சண்டையைத் தடுக்கலாம். அதோடு, மனம்விட்டுப் பேசுவதன்வழி ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லலாம். 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' எனும் பாடலை நாம் கேட்டிருப்போம். அதற்கு ஏற்றவாரே நாமும் நமது குடும்பத்தினருடன் சந்திஷமாகவும் சண்டை சச்சரவின்றியும் வாழலாம். 

    அடுத்ததாக, நாம் கடற்கரைக்குச் செல்வதனால் மன நிம்மதி கிடைக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐய்யமில்லை. சில்லென்ற கடல் நீர், இதமான தென்றல் காற்று, கடல் அலையின் ஓசை, கொஞ்சி விளையாடும் பறவைகள் என யாவும் மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் போக்கி மன நிம்மதியைக் கொடுக்கும். மன நிம்மதி கிடைப்பதனால் சந்தோஷமாக இருக்கலாம்.  அதோடு,கடற்கரை காட்சிகள் மனதுக்கு குளிரூட்டும். மன நிம்மதியாக இருப்பதனால், கவலையின்றி இருக்கலாம். மன நிம்மதி மன வலிமையைப் பலப்படுத்தும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை எனலாம். நாம் ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதற்கு மன வலிமையையும் முக்கியப் பங்காற்றுகிறது.

    அதற்கு அடுத்ததாக, கடற்கரைக்குச் செல்வதனால் நாட்டின் பொருளாதாரம் உயர்கிறது. காரணம், கடற்கரை ஓரத்தில் சிற்பிகள் இருக்கும். சிப்பியானது கடல் அலைகளால் கடற்கரையை வந்தடைகிறது. பெருமளவில் கைவினைப் பொருள் தயாரிக்கும் நபர்கள் தங்களின் கசிந்தனைத் திறனால் கொண்டு சிப்பிகள் மூலம் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கின்றனர். உதாரணத்திற்கு பெண்கள் உபயோகிக்கும் கைப்பை, சுவர் தொங்காடி, சுவர் கடிகாரம் மற்றும் பல. இப்படிப்பட்ட அழகான பொருட்கள் யார் மனதின் ஆசையைத் தூண்டாமலிருக்கிறது? ஆகவே, கடற்கரை ஓரம் கிடைக்கப்பெறும் சிப்பிகளின் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்களை வாங்குவதனாலும் நாட்டின் பொருளாதாரம் உயர்கிறது என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.

    அடுத்ததாக, நம் அன்றாட வாழ்வில் மின்சாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நாம் மின்சாரத்தை சூரிய ஒளி, நீர், இடி என பல மூலங்களிலிருந்து பெறுகிறோம். அதே போல், கடல் அலையிலிருந்து நமக்கு மின்சாரம் கிடைக்கின்றது. மின்சாரத்தை நாம் உபயோகம் செய்வதனால் இரவில் எந்தவித தங்குதடையுமின்றி சுலபமாகவும் வேகமாகவும் வேலையைச் செய்து முடிக்க இயல்கிறது. உலகைச் சுற்றிப் பல இடங்களில் கடல் இருப்பதனால், எந்தவொரு நாட்டிலும் மின்சாரம் இல்லாமல் இருக்காது என்பதில் நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது. கடலினால் ஏற்படும் நன்மைகளில் ஏற்படும் நன்மைகளில், நமக்கு மின்சாரம் நமக்கு மின்சாரம் கிடைக்கப் பெறுவதும் அடங்கும். 

    ஆகவே, நாம் கடற்கரைச் செல்வதனால் பல நன்மைகளை அடைகின்றோம். அதோடு, மனிதர்களாகிய நமக்குப் பல நமைகளைக் கொடுக்கும் கடற்கரையின் சுத்தத்தைப் பேண வேண்டும். 

Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)