கே.பி.சுந்தரம்பாள்

    இருபதாம் நூற்றாண்டில் 100 முக்கியத் தமிழர்களில் ஒருவர் கே.பி.எஸ் எனும்  கே.பி.சுந்தரம்பாள். இவர் நாடகம், இசை, ஆன்மிகம், திரைப்படம், அரசியல் எனப் பலதுறைகளிலும் ஈடுபட்டுப் பெரும்புகழ் ஈட்டியவர். இவர் திரைப்பாடல்கள் மற்றும் பக்திப்பாடல்கள் என ஏறத்தாழ 800 பாடல்கள் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் இவருடைய பாடல்களின் இசைத்தட்டுகளே அதிகம் விற்று சாதனையும் படைத்துள்ளன.
    தமிழ் கடவுள் முருகன் வரலாறு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது திருவிளையாடல் படமும், "பழம் நீயப்பா! ஞானப்பழம் நீயப்பா!" என்ற பாடலும்தான். சங்கப்புலவர் ஒளவையாரே இவ்வளவு ரம்மியமான, கம்பீரமான குரலில் பாடியிருக்கமாட்டார். ஒளவையார் என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற மனதை விட்டு நீங்காத பிம்பத்தை அனைவரின் நெஞ்சிலும் பதிய வைத்தவர் கே.பி.சுந்தரம்பாள். ஒளவையார், திருவிளையாடல், கந்தன் கருணை ஆகிய 3 படங்களில் ஒளவையாராக நடித்துள்ளார். அப்போதுள்ள நடிகைகள் வெறும் எட்டாயிரம் சம்பளம் வாங்கியபோது அதுவரை யாரும் வாங்காத அளவு சம்பளமான 1 லட்சம் ரூபாயை ஒளவையார் படத்தில் நடிக்க சம்பளம் வாங்கியவர். இசைபேரறிஞர், பத்மஸ்ரீ உள்பட பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்தவர் கே.பி.சுந்தரம்பாள்.

Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)