தொழில் மயமாக்கலின் நன்மை தீமைகள்



    உலகம் முழுவதும் நவீன வளர்ச்சி கொண்ட நாடுகள் மத்தியிலும் தொழில் துறையின் தேவை உணரப்பட்டுள்ளது. தொழில் துறையின் விரைவான பொருளாதார வளர்ச்சி இதர துறைகளுடனான முன்னேற்றத்தையும் பின்னடைவையும் சார்ந்தே உள்ளது. 'தொழில் மயமாக்குதல்' என்பது அளவு உற்பத்திச் செய்யும் தொழில் துறைகளின் பரவலாக்கம், அதிகமான தொழிலாளிகள், பன்னாட்டுச் சந்தையை ஊக்குவித்தல், தனித்திறன் மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், உற்பத்தியை மேம்படுத்தும் சாதனங்கள், கணினி தொழில்நுட்பம் போன்றவற்றின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்வனவாகும். இவ்வாறு முனைப்பான தொழில் மயமாக்குதல் இல்லாததால் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவைச் சந்திக்கின்றன; ஏழ்மை நிலையில் உள்ளன. எனவே, நவீன வளர்ச்சி நிலைகளில் விரைவான வளர்ச்சியையும் பொருளாதார மேம்பாட்டையும் பெறுவதற்குத் தொழில் துறையின் பங்கு அளப்பரியதாகும்.
    தொழில் மயமாக்குதல் மூலம் நாட்டு   வருமானம் உயர்ந்து பொருளாதாரம் சீரடைகிறது. பொருளாதார நிலையில் முன்னேறியிருக்கும் நாடுகளின் பெரும்பங்கு வருவாய் தொழில் துறையிடமிருந்து கிடைக்கப்பெறுகிறது. தொடர்ந்து, தொழில் மயமாக்கலால் அதிகமான வேலை வாய்ப்புகள் உண்டாகும். நாட்டின் வளர்ச்சிக்கு உபரியான உழைப்பும் வேலையின்மையும் பெரிய சவாலாக அமைகின்றன. தொழில் மயமாக்குதல், நாட்டின் உற்பத்தி வளங்களை நன்கு பயன்படுத்திக் கொள்வதால் வேலை வாய்ப்பு  அதிகரிக்கிறது.  இதனால்,மக்களின் வருமானம் மேம்படும். தொழில் மயமாக்குதலின்வழி நாட்டின் பொருளாதாரம் உயரும்.  ஆகையால், உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின்மீது மக்களுக்கு நாட்டம் அதிகரிக்கும். எனவே, மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும். இது திட்டமிட்ட வளர்ச்சிப் பாதையின் மூலமே சாத்தியமாகும்.
     ,மேலும், தொழில் துறையில் முன்னேறிய நாடுகள் அதிக ஏற்றுமதியைச் செய்வதனால் அதிகப்படியான அந்நியச் செலாவணியை ஈட்ட முடிகிறது. தொழில் துறை பொருள்களின் வருமானம் அடிப்படைப் பண்டங்களைக் காட்டிலும் அதிகமாக  உள்ளது. வேலை வாய்ப்புகளைப் பெருக்குதல், விரைவான தொழில் மயமாக்குதலினால் ஏற்படும் வருமான உயர்வு முதலியன பொருளாதாரத்தில் சேமிப்பு மற்றும் மூலதனம் ஆக்கத்தைப் பெருக்குகிறது. இதனால், ஏற்படும் அதிக முதலீட்டினால் தொழில் துறைகள் பல வகைகளிலும் முன்னேறுகின்றன. அடுத்ததாக, வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தால் தொழில் துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியினையும் ஊக்குவிக்கிறது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதன் இயக்க ரீதியான பொருளடக்கமும் நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தைப் புலப்படுத்துகின்றன. 
    தொழில் மயமாக்கல் பல நன்மைகளை அளிக்கும் வேளையில் சில தீமைகளையும் ஏற்படுத்துகின்றன. தொழில் மயமாக்களால் பல பாரம்பரியத் தொழில்கள் வீழ்ச்சி காண்கின்றன. இதனால், அக்குறிப்பிட்ட தொழில் செய்வோர் பெரும் பாத்திப்புக்குளாகின்றனர். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித மூலதனம் குறைந்துகொண்டே வருகிறது. ஆகையால், எதிர்காலத்தில் அதிகமான வேலை வாய்ப்புகள் பறிபோகும் அவலம் ஏற்படக்கூடும்.
    சுருங்கக்கூறின், தொழில் மயமாக்கல் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும். தொழில் மயமாக்கலை உருவாக்கிப் புதியதொரு சகாப்தம் படைப்போம்.

Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)