ஏ.பி.ஜெ அப்துல் கலாம்
இந்தியாவின் பதினோராவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியுமான ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்கள் சிறந்த அறிஞர் ஆவார். அவர் இந்திய மக்களுக்காகக் குறிப்பாக மாணவர்களிடையே செய்திறனுக்காகவும் நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது சுயசரிதை நூலான 'அக்னிச்சிறகுகள்' எனும் நூலில் அவரது அறிவியல் கண்டுப்பிடிப்புப் போராட்டங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. தூண்டுகோல் இன்றி நாம் சாதிக்க முடியாது எனும் கூற்றுக்கிணங்க அப்துல் கலாம் தாம் கற்ற திருக்குறளுக்கு ஏற்பத் தமது வாழ்க்கையை முன்னேற்றத்துக்கு வழிவகுத்தார். தமது பள்ளிக்காலத்தில் மிதிவண்டியில் வீடு வீடாகச் சென்று நாளிதழ்கள் விற்று தமது படிப்புக்குத் தானே உதவிக் கொண்டார். மனிதனுக்குச் செய்ப்புண்ணியம் மிகவும் அவசியம். நாட்டுக்கு அவர் செய்த புண்ணியமானது அவரை ஏவுகணை நாயகனாக மாற்றியமைத்தது. இளைழர்களுக்கு இளமையிலேயே கல்வியின் விளைபயன் பற்று நன்கு எடுத்துரைத்தார். அதிபர் பதவி ஓய்வுக்குப் பின்னரும் அவர் 'கனவுகாண்' எனும் மந்திரச் சொல்லே அவரது பாடுபொருளாக இருந்தது. எதிர்காலத்தை மாணவர்கள் நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று எப்போதும் கூறி வந்தார். அவரது மறைவு உலகத்த தமிழுக்கே பேரிழப்பாகும். அவர் வாழ்ந்த இராமேசுவரத்தில் அவருக்கு நினைவிடமும் எழுப்பப்பட்டுள்ளது.
Comments