மின்வணிகம்
'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று நம் முன்னோர்கள் வாய் மொழிந்துள்ளனர். ஆனால், இன்று திரை கடலோடி திரவியம் தேடுவதற்கு அவசியமற்றுப்போகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கணினியின்வழி பணம் ஈட்டக்கூடிய சூழல் நிலவுகிறது. நவீன உலகமயமாதலால் ஆழி போன்று பரந்து விரிந்திருந்த உலகம் ஒரு விறல் நுனியில் அடங்கி கொண்டிருக்கிறது.அதற்குக் காரணம் நாம் ஓர் இடத்தில் இருந்தவாறே சில மணித்துளிகளில் உலகில் எந்த இடத்தில் இருப்பவரிடமும் தொடர்புகொண்டு வணிகம் செய்யும் சூழலைக் குறிப்பிடலாம். இன்று உலகின் மொத்தத் தொலைத்தொடர்புகளையும் இணையம் சிறைப்படுத்தி வைத்துள்ளது எனில் அது மிகையாகாது. இந்த இணையத்தின் பயன்பாடும் ஆதிக்கமும் உலகின் மொத்த செல்வங்களை உள்ளடக்கிய வணிகச் செயல்பாடுகளையும் விட்டுவைக்கவில்லை. இன்றைய 21ஆம் நூற்றாண்டில் வணிக மாற்றத்திற்கு வித்திட்டது உலகமயமாதல் கொள்கையாகும். பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தகர்த்தேறிந்து உலக வணிகத்தைக் கையகப்படுத்த இணையம் பெரும் பங்காற்றி வருகிறது. பாரம்பரிய வணிகத்தில் காகிதத்தின் பயன்பாடு மிகுந்திருந்தது. மின்...