Posts

Showing posts from October, 2021

புவான்ஸ்ரீ ஆதிநாகப்பன்

Image
    மலேசிய மேலவை உறுப்பினராக (செனட்டர்) பொறுப்பேற்ற முதல் இந்திய பெண்மணி   புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்ஆவார். இவர் மஇகாவை நிறுவியவர்களில் ஒருவர். மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர்.      தன்னுடைய 18ஆவது வயதிலேயே நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி வகித்தவர். இவ்வாறு பல்வேறு சிறுப்புக்களைப் பெற்ற ஜானகி, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. 

கே.பி.சுந்தரம்பாள்

Image
    இருபதாம் நூற்றாண்டில் 100 முக்கியத் தமிழர்களில் ஒருவர் கே.பி.எஸ் எனும்   கே.பி.சுந்தரம்பாள். இவர் நாடகம், இசை, ஆன்மிகம், திரைப்படம், அரசியல் எனப் பலதுறைகளிலும் ஈடுபட்டுப் பெரும்புகழ் ஈட்டியவர். இவர் திரைப்பாடல்கள் மற்றும் பக்திப்பாடல்கள் என ஏறத்தாழ 800 பாடல்கள் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் இவருடைய பாடல்களின் இசைத்தட்டுகளே அதிகம் விற்று சாதனையும் படைத்துள்ளன.     தமிழ் கடவுள் முருகன் வரலாறு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது திருவிளையாடல் படமும், "பழம் நீயப்பா! ஞானப்பழம் நீயப்பா!" என்ற பாடலும்தான். சங்கப்புலவர் ஒளவையாரே இவ்வளவு ரம்மியமான, கம்பீரமான குரலில் பாடியிருக்கமாட்டார். ஒளவையார் என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற மனதை விட்டு நீங்காத பிம்பத்தை அனைவரின் நெஞ்சிலும் பதிய வைத்தவர்  கே.பி.சுந்தரம்பாள். ஒளவையார், திருவிளையாடல், கந்தன் கருணை ஆகிய 3 படங்களில் ஒளவையாராக நடித்துள்ளார். அப்போதுள்ள நடிகைகள் வெறும் எட்டாயிரம் சம்பளம் வாங்கியபோது அதுவரை யாரும் வாங்காத அளவு சம்பளமான 1 லட்சம் ரூபாயை ஒளவையார் படத்தில் நடிக்க சம்பளம் வாங்கியவர். இசைபேரறிஞர்,...

பெண் சுதந்திரம்

Image
    'நான்கு சுவருக்குள் வாழ நீ ஒரு கைதியா!' என்கிறது ஒரு பாடலும் வரி. எல்லோருக்கும் எங்கும் எப்போதும் சுதந்திரம் என்கிறார் புரட்சிப் பாவலர் பாரதி. மனித வாழ்வில் அடிப்படை உரிமை ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் சுதந்திரம். எங்கே சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே போராட்டங்கள் வெடிக்கின்றன. நாட்டின் சுதந்திரம், ஒரு சமூகத்தின் சுதந்திரம், தனிமனித சுதந்திரம் என்று ஒவ்வொரு வகையில் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் இந்தப் போராட்டங்களுக்கு ஏதாவது ஒருவகையில் தீர்வுகள் கிடைக்கப் பெறுகின்றன. அனால், பெண்களுக்கான சுதந்திரம் முழுமையாகக் கிடைக்கப் பெற்று விட்டனவா என்றால் அது விடை காண முடியாத வினாவாகவே முடிவு கொள்கிறது.      பெண்களுக்கான சுதந்திரம் இன்றல்ல நேற்றல்ல, அது தொடர் போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. விடுதலை பெற்ற நாட்டில் விடுதலையின்றி வாழ்வது பெண்களுக்குக் கிடைத்த சாபமாக அமைந்திருக்கிறது. இங்கே பெண் சுதந்திரம் என்பது எவ்வகையானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காலையில் வீட்டை விட்டுச் சென்று இரவு பன்னிரண்டு மணிக்குத...

அரசியல் விழிப்புணர்வு

Image
          அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்பது சிலப்பதிகாரத்தின் வாக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் மக்கள் நலன்கருதி நாட்டை ஆள வேண்டும். மக்களுக்கு ஏற்படும் அல்லல்களைத் துடைத்தொழிப்பதே அரசின் முதல் கடமையாகக் கொள்ள வேண்டும். அந்த நோக்கத்திலிருந்து பிளவுபடும் அரசாங்கம் மக்களால் புறக்கணிக்கப்படும் என்பது தெளிவு. மக்களாட்சியில் நாட்டின் நிதியை நேர்மையாகக் கையாள்வது அவசியம். சுய இலாபத்திற்காக நாட்டின் நிதியைத் தவறாகக் கையாளும் அரசியல் தலைவர்களின் விதியை மாற்றி அமைக்கும் சக்தியை மக்கள் கொண்டுள்ளனர். அதைத்தான் இளங்கோளிவடிகள் அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்றார். அவ்வாறான தலைவர்கள் காலத்தின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதைத்தான் விதி வலியது என்பார்கள்.     தவறு இழைக்கும் அரசியல் தலைவர்களை அஞ்சாமல் தட்டிக் கேட்கும் மனத்திட்பத்தை மக்கள் கொண்டிருக்க வேண்டும். இதுதான் தெளிவான அரசியல் விழிப்புணர்வு. அரசியல் விழிப்புணர்வு என்பது தீவிர அரசியலில் ஈடுபடுவது என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. நாட்டில் நடைபெறும் அரசியல் தொடர்...

கடற்கரை

Image
      உலகில் கண்களைக் கவரும் இடங்கள் பல நமக்குத் தெரியாமல் உள்ளன. ஆனால், நாம் அனைவருக்கும் தெரிந்த கண் கவர் இடங்களில் கடற்கரையும் ஒன்று எனலாம். கடற்கரையைப் பற்றி அறியாதவர் யாவரும் இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடற்கரைக்குச் செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். உலகில் அனைத்து இடங்களிலும் கடற்கரை இருக்கின்றது. கடற்கரைக்குச் செல்வதனால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன.     நாம் கடற்கரைக்குச் செல்வதால் சுத்தமான உயிர்வளியைச் சுவாசிக்க முடிகின்றது. காரணம் நாம் வழக்கமாக சுவாசிக்கும் காற்றைவிட கடற்கரையில் சுவாசிக்கும் காற்றில்  அதிகமாக உள்ளது. நாம் கடற்கரையில் சுவாசிக்கும் காற்று, நம்மை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அது மட்டுமல்லாது, சுத்தமான உயிர்வளியைச் சுவாசிப்பதனால் இரத்த ஓட்டம் சீர் அடையும். அதனால், நாம் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழலாம். அதோடு, கடற்கரை காற்றில் உயிர்வளியின் அளவு அதிகமாக இருப்பதனால்தான் சிலர் கடற்கரை ஓரத்தில் மெது ஓட்டம் ஓடுகின்றனர், உடற்பயிற்சி செய்கின்றனர். ஆகவே, கடற்கரைக்குச் செல்வதனால்...