வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் ஏற்படும் விளைவுகள்
இன்றைய இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பல வகைகளில் தொழிற்சாலைகள் உள்ளன. நாம் காலில் அணியும் செருப்பு முதல் தலையில் உள்ள முடியை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் வரை அனைத்தையும் தயாரிக்க தொழிற்சாலை பல இயங்குகின்றன. தொழிற்சாலை என்பது நாம் அனைவரும் பயன்படுத்தும் பொருள்களைத் தயாரிக்கும் ஓர் இடமாகும். அதோடு, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஒவ்வொரு நாளும் கண்டுப்பிடிக்கப்படும் பொருள்களை அதிகளவில் தயாரிக்க தொழிற்சாலைகள் பெரிதும் பங்காற்றுகின்றன. அதோடு, தொழிற்சாலைகளால் நமக்குப் பல விளைவுகள் ஏற்படுகின்றன. இவ்விளைவுகளானது நமது அன்றாட வாழ்வில் பல மாற்றங்களை விளைவிக்கின்றன. முதல் நன்மையானது, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இன்றையக் காலக்கட்டத்தில், இளைஞர்கள் பலர் படித்துவிட்டு வேலை இல்லாமல் திண்டாடுகின்றனர். அதோடு, வேலை இல்லாத இளைஞர்கள் தங்களுக்கு பணத்தேவை இருப்பின் தனது பெற்றோர்களையே நம்பி இருக்கின்றனர். ஆகவே, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். பலருடைய வேலைய...