Posts

விளையாட்டு

Image
    ஓய்வாக இருக்கும் நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கவே விளையாட்டை விளையாடுகிறோம். தனி மனிதராக மட்டுமல்லாமல் இரட்டையராகவோ அல்லது பலரும் சேர்ந்து ஒன்றாகவோ எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். பம்பரம், பட்டம்விடுதல் போன்றவை ஒற்றையராக விளையாடும் விளையாட் டுகளாகும். பல்லாங்குழி, ஆடு புலி போன்ற விளையாட்டுகள் இரட்டையராக விளையாடும் விளையாட்டுகளாகும். பலரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் பல உள்ளன. காற்பந்து, கூடைப்பந்து, கபடி போன்றவை குழு விளையாட்டுகளாகும். பல பிரிவுகளாகப் பிரிக்கப்படும் விளையாட்டினால் பலரும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.          விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் நாம் மன அமைதியைப் பெறலாம் என்பது திண்ணம். இன்றைய உலகப் போக்கில் பலருக்கும் பல பிரச்சனைகளால் கவலை ஏற்படுகிறது. இக்கவலையானது, மன உளைச்சலுக்கும் மனக்கவலைக்கும் வித்திடுகிறது. மன உளைச்சலின் காரணமாக மன நோயாளியாக மாறியவர்கள் சிலர் சாலை ஓரங்களில் செல்வதை நாம் பார்த்திருப்போம். நமக்குத் தெரியாமல் பலரும் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமின்றி, மன உளைச்சல் ஒரு மனிதனின் உடல் நலத்திற்கும்...

தொற்றுநோய்களால் மனிதர்களுக்குப் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Image
    உலகில் பல உயிரினங்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றன.  முக்கிய பங்கை வகிக்கின்றனர். மனிதர்களாகிய நமக்குப் பல திசைகளிலிருந்து பல பிரச்சனைகள் வருகின்றன; பாதிப்புகள் ஏற்படுகின்றன. அப்பிரச்னைகளில் ஒன்றுதான் தொற்றுநோய்  ஆகும்.  ஒன்றாம்  நூற்றாண்டில், நோய்கள் பல உருவெடுக்கப்படுகின்றன. தொற்றுநோயானது மனிதர்களைத்  கைப்பிடியில் வைத்துள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை. தொற்றுநோய் மனிதர்களுக்குப் பல பாதிப்புகளையும் துன்பங்களையும் ஏற்படுத்துகின்றன.     சாதாரண சலி அல்லது காய்ச்சல் என்றாலே நாம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிடுவோம். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவருக்கும் அவர் கொடுக்கும் மருந்துகளுக்கும் பணம் செலுத்துவோம்.  இதனால், மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. அதோடு, உடல் நிலை மோசமாக இருப்பின், மருத்துவமனையிலேயே தங்க நேரிடும். இதனால், காட்டில், உணவு மற்றும் இன்னும் சிலவற்றிற்கு அதிகமான பணத்தைச் செலவு செய்ய நேரிடும். அதே வேளையில், தொற்றுநோயாக இருப்பின் அருகில் இருப்பவர்களுக்கும் அந்நோய்  பரவும். தக்க சமயத்தில் சிகிச்சை...

ஆனந்த கிருஷ்ணன்

Image
            மிகக் குறுகிய காலத்திலேயே மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக அனைவரும் அதிசயிக்கும் வகையில் உயர்ந்தவர்   ஆனந்த கிருஷ்ணன். வணிகக் குடும்பம் அல்லாத பின்னணியைக் கொண்ட  ஆனந்த கிருஷ்ணன், வணிகத்துக்கான உலகப் புகழ்பெற்ற கல்வி மையமான அமெரிக்காவின் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தான் பெற்ற கல்வி மற்றும் அமெரிக்காவில் பெற்ற வணிக அனுபவத்தைக் கொண்டும், எண்ணெய் பரிமாற்ற வணிகத்தில் தான் ஏற்கனவே ஈட்டிய வருமானத்தைக் கொண்டும் மலேசியாவில் சில வணிக முயற்சிகளில் ஈடுபட்டார். பல்வேறு நவீனமயமான வணிகத் திட்டங்களில் ஈடுபட்டுத் தனது வணிக நிறுவனங்களைப் பெருக்கி, தொழிலை விரிவாக்கிக் கொண்டார். அவர் தொடங்கிய, முதலீடு செய்த தொழில்கள் அனைத்துமே, நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டவை என்பதுதான் அவர் மிகக் குறுகிய காலத்தில், மிகப் பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட சீன வணிகர்களைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் இரண்டாவது பணக்காரர் இடத்தை அவர் பிடிப்பதற்கு உதவி புரிந்தது. நாட்டின் உயர்ந்த கட்டடமான பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தை நிர்மாணிப்பதில் பெட்ரோனாசுடன் இணைந்து முக்கிய பங்கு...

வெற்றி

Image
    ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்  வகையில் வெற்றி  வருகிறது. கயல்விழி பதினாறு வயது இளம்பெண். கயல்விழிக்கு பாடல் பாடுவதிலும், பாடல் வரிகள் எழுதுவதிலும் மிகுந்த நாட்டம் கொண்டவள். கயல்விழியின் தோற்றமோ கிளியைப்  போன்றது.அவளது குரலோ குயிலைப் போன்றது.  ஆயினும், பாட்டில் நாட்டம் செலுத்துவதானால் அவள் தினமும் தன பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்குவாள். அவளது நண்பர்களோ சிலர் அவள் பாடுவதை ரசிப்பார்கள்; சிலரோ பொறாமை கொண்டு வெறுத்தனர்.     பதினாறு வயதுடைய கயல்விழி தனது படிப்பிலும் திறமைகளிலும் போட்டிகுமான ஈடுபாட்டையம் கவனத்தையும் செலுத்தினால். காலம் பணத்தைப் போல உருண்டோடியது. அவளுக்கும் வயது பதினேழானது. தனது எஸ்.பி.எம் தேர்வுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. பாட்டிலும் படிப்பிலும் சமமளவு ஈடுபாட்டைச் செலுத்தியதனால் அவள் தனது மாதிரி எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த புள்ளிகளைப் பெறவில்லை. படிப்பில் சிறந்த மாணவியின் சரிவுண்ட தேர்ச்சிகள் கயல்விழியின் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் சோகக் கடலில் மூழ்கடித்தது. இரண்டு மாதங்கள், தனது எஸ்.பி.எம் தேர்வுக்காக தயாரா...

மின்னியல் வணிகத்தால் விளைவுகள்

Image
    மின்னியல் வணிகம் என்பது நாம் இணையத்தில் செய்யும் வணிகம் எனப்படும். இன்றைய இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் நம் நாட்டில் மட்டுமல்லாமல் இன்னும் பல நாடுகளில் மின்னியல் வணிகம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.எண்ணிலடங்கா மக்கள் மின்னியல் வணிகத்தைப் பயன்பாட்டில் கொண்டுள்ளனர். சிறுதொழில் செய்பவர்கள் முதல் பெருந்தொழில் செய்பவர்கள் வரை பலரும் மின்னியல் வணிகத்தை விரும்பி மேற்கொள்கின்றனர். ஆகையால், இணையம் வழியாக மேற்கொள்ளப்படும் மின்னியல் வணிகத்தால்  பல உள்ளன.      மின்னியல் வணிகம் மேற்கொள்வதனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறுதொழில் மற்றும் பெருந்தொழில் செய்பவர்கள் தங்களது வியாபாரத்தை அல்லது பொருட்களை அதிகளவில் விற்பனை செய்யலாம். இதனால், வியாபாரிகள் அதிகமான அளவில் தங்களது வருமானத்தை ஈட்டலாம். மின்னியல் வணிகத்தால் வியாபாரம் செய்வதற்கு முன்பு சிறுதொழில் வியாபாரிகள் உள்நாட்டில் மட்டுமே வியாபாரம் செய்தனர். இதனால், குறைந்த வருமானமே பெற்று வைத்தனர். அதோடு மட்டும் இல்லாமல், மின்னியல் வணிகத்தால் குறைந்த செலவில் பல நாடுகளுக்குப் பொருளை விற...

வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் ஏற்படும் விளைவுகள்

Image
    இன்றைய இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பல வகைகளில் தொழிற்சாலைகள் உள்ளன. நாம் காலில் அணியும் செருப்பு முதல் தலையில் உள்ள முடியை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் வரை அனைத்தையும் தயாரிக்க தொழிற்சாலை பல இயங்குகின்றன. தொழிற்சாலை என்பது நாம் அனைவரும் பயன்படுத்தும் பொருள்களைத் தயாரிக்கும் ஓர் இடமாகும். அதோடு, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஒவ்வொரு நாளும் கண்டுப்பிடிக்கப்படும் பொருள்களை அதிகளவில் தயாரிக்க தொழிற்சாலைகள் பெரிதும் பங்காற்றுகின்றன. அதோடு, தொழிற்சாலைகளால் நமக்குப் பல விளைவுகள் ஏற்படுகின்றன. இவ்விளைவுகளானது நமது அன்றாட வாழ்வில் பல மாற்றங்களை விளைவிக்கின்றன.     முதல் நன்மையானது, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இன்றையக் காலக்கட்டத்தில், இளைஞர்கள் பலர் படித்துவிட்டு வேலை இல்லாமல் திண்டாடுகின்றனர். அதோடு, வேலை இல்லாத இளைஞர்கள் தங்களுக்கு பணத்தேவை இருப்பின் தனது பெற்றோர்களையே நம்பி இருக்கின்றனர். ஆகவே, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். பலருடைய வேலைய...

தொழில் மயமாக்கலின் நன்மை தீமைகள்

Image
    உலகம் முழுவதும் நவீன வளர்ச்சி கொண்ட நாடுகள் மத்தியிலும் தொழில் துறையின் தேவை உணரப்பட்டுள்ளது. தொழில் துறையின் விரைவான பொருளாதார வளர்ச்சி இதர துறைகளுடனான முன்னேற்றத்தையும் பின்னடைவையும் சார்ந்தே உள்ளது. 'தொழில் மயமாக்குதல்' என்பது அளவு உற்பத்திச் செய்யும் தொழில் துறைகளின் பரவலாக்கம், அதிகமான தொழிலாளிகள், பன்னாட்டுச் சந்தையை ஊக்குவித்தல், தனித்திறன் மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், உற்பத்தியை மேம்படுத்தும் சாதனங்கள், கணினி தொழில்நுட்பம் போன்றவற்றின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்வனவாகும். இவ்வாறு முனைப்பான தொழில் மயமாக்குதல் இல்லாததால் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவைச் சந்திக்கின்றன; ஏழ்மை நிலையில் உள்ளன. எனவே, நவீன வளர்ச்சி நிலைகளில் விரைவான வளர்ச்சியையும் பொருளாதார மேம்பாட்டையும் பெறுவதற்குத் தொழில் துறையின் பங்கு அளப்பரியதாகும்.     தொழில் மயமாக்குதல் மூலம் நாட்டு   வருமானம் உயர்ந்து பொருளாதாரம் சீரடைகிறது. பொருளாதார நிலையில் முன்னேறியிருக்கும் நாடுகளின் பெரும்பங்கு வருவாய் தொழில் துறையிடமிருந்து கிடைக்கப்பெறுகிறது. தொடர்ந்து, தொழில் மயமாக்...

ஏ.பி.ஜெ அப்துல் கலாம்

Image
    இந்தியாவின் பதினோராவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியுமான   ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்கள் சிறந்த அறிஞர் ஆவார். அவர் இந்திய மக்களுக்காகக் குறிப்பாக மாணவர்களிடையே செய்திறனுக்காகவும் நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது சுயசரிதை நூலான 'அக்னிச்சிறகுகள்' எனும் நூலில் அவரது அறிவியல் கண்டுப்பிடிப்புப் போராட்டங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. தூண்டுகோல் இன்றி நாம் சாதிக்க முடியாது எனும் கூற்றுக்கிணங்க அப்துல் கலாம் தாம் கற்ற திருக்குறளுக்கு ஏற்பத் தமது வாழ்க்கையை முன்னேற்றத்துக்கு வழிவகுத்தார். தமது பள்ளிக்காலத்தில் மிதிவண்டியில் வீடு வீடாகச் சென்று நாளிதழ்கள் விற்று தமது படிப்புக்குத் தானே உதவிக் கொண்டார். மனிதனுக்குச் செய்ப்புண்ணியம் மிகவும் அவசியம். நாட்டுக்கு அவர் செய்த புண்ணியமானது அவரை ஏவுகணை நாயகனாக மாற்றியமைத்தது. இளைழர்களுக்கு இளமையிலேயே கல்வியின் விளைபயன் பற்று நன்கு எடுத்துரைத்தார். அதிபர் பதவி ஓய்வுக்குப் பின்னரும் அவர் 'கனவுகாண்' எனும் மந்திரச் சொல்லே அவரது பாடுபொருளாக இருந்தது. எதிர்காலத்தை மாணவர்கள் நல்வழியில் கொண்டு ச...

மு.கருணாநிதி

Image
    மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர்  மு.கருணாநிதி, 5 முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமையைப் பெற்றவர். பன்முகத் தன்மை வாய்ந்த கலைஞர் தமிழ் மொழிக்காக ஆற்றிய பங்கு அளப்பரியது. தன வாழ்நாள் முழுவதும் எழுத்துப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர். சமூகப் பார்வையும், அனல் தெறிக்கும் வசனங்களும், அழகு கொஞ்சும் மொழிநடையும் அவருக்கே உரியது. பராசக்தி, மனோகரா, திரும்பிப் பார், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற திரைப்படங்கள் அவரது வசனங்களுக்காகவே புகழ் பெற்றவை. நிறைய நாடகங்களை எழுதி சிலவற்றில் நடித்தும் உள்ளார். அவர் எழுதிய திரைப்பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை. தனக்கே உரிய புதுமையான நடையில் ஏராளமான கவிதைகளை எழுதி, தமிழ் தமிழ் மொழியை அவர் செம்மைப்படுத்தியிருக்கிறார். கவியரங்கங்களில் பங்கு பெற்று அதன்வழி பல கவியரங்கக் கவிதைகளை வார்த்துத் தந்தவர் கலைஞர். அவர் எழுதிய "உடன்பிறப்பே" என்று தொடங்கும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அழகிய மொழி நடைக்காகவும், ஆழ்ந்த கருத்துகளுக்காகவும் போற்றப்படுகின்றன.      சங்கத் தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா  என...

புவான்ஸ்ரீ ஆதிநாகப்பன்

Image
    மலேசிய மேலவை உறுப்பினராக (செனட்டர்) பொறுப்பேற்ற முதல் இந்திய பெண்மணி   புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்ஆவார். இவர் மஇகாவை நிறுவியவர்களில் ஒருவர். மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர்.      தன்னுடைய 18ஆவது வயதிலேயே நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி வகித்தவர். இவ்வாறு பல்வேறு சிறுப்புக்களைப் பெற்ற ஜானகி, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. 

கே.பி.சுந்தரம்பாள்

Image
    இருபதாம் நூற்றாண்டில் 100 முக்கியத் தமிழர்களில் ஒருவர் கே.பி.எஸ் எனும்   கே.பி.சுந்தரம்பாள். இவர் நாடகம், இசை, ஆன்மிகம், திரைப்படம், அரசியல் எனப் பலதுறைகளிலும் ஈடுபட்டுப் பெரும்புகழ் ஈட்டியவர். இவர் திரைப்பாடல்கள் மற்றும் பக்திப்பாடல்கள் என ஏறத்தாழ 800 பாடல்கள் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் இவருடைய பாடல்களின் இசைத்தட்டுகளே அதிகம் விற்று சாதனையும் படைத்துள்ளன.     தமிழ் கடவுள் முருகன் வரலாறு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது திருவிளையாடல் படமும், "பழம் நீயப்பா! ஞானப்பழம் நீயப்பா!" என்ற பாடலும்தான். சங்கப்புலவர் ஒளவையாரே இவ்வளவு ரம்மியமான, கம்பீரமான குரலில் பாடியிருக்கமாட்டார். ஒளவையார் என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற மனதை விட்டு நீங்காத பிம்பத்தை அனைவரின் நெஞ்சிலும் பதிய வைத்தவர்  கே.பி.சுந்தரம்பாள். ஒளவையார், திருவிளையாடல், கந்தன் கருணை ஆகிய 3 படங்களில் ஒளவையாராக நடித்துள்ளார். அப்போதுள்ள நடிகைகள் வெறும் எட்டாயிரம் சம்பளம் வாங்கியபோது அதுவரை யாரும் வாங்காத அளவு சம்பளமான 1 லட்சம் ரூபாயை ஒளவையார் படத்தில் நடிக்க சம்பளம் வாங்கியவர். இசைபேரறிஞர்,...

பெண் சுதந்திரம்

Image
    'நான்கு சுவருக்குள் வாழ நீ ஒரு கைதியா!' என்கிறது ஒரு பாடலும் வரி. எல்லோருக்கும் எங்கும் எப்போதும் சுதந்திரம் என்கிறார் புரட்சிப் பாவலர் பாரதி. மனித வாழ்வில் அடிப்படை உரிமை ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் சுதந்திரம். எங்கே சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே போராட்டங்கள் வெடிக்கின்றன. நாட்டின் சுதந்திரம், ஒரு சமூகத்தின் சுதந்திரம், தனிமனித சுதந்திரம் என்று ஒவ்வொரு வகையில் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் இந்தப் போராட்டங்களுக்கு ஏதாவது ஒருவகையில் தீர்வுகள் கிடைக்கப் பெறுகின்றன. அனால், பெண்களுக்கான சுதந்திரம் முழுமையாகக் கிடைக்கப் பெற்று விட்டனவா என்றால் அது விடை காண முடியாத வினாவாகவே முடிவு கொள்கிறது.      பெண்களுக்கான சுதந்திரம் இன்றல்ல நேற்றல்ல, அது தொடர் போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. விடுதலை பெற்ற நாட்டில் விடுதலையின்றி வாழ்வது பெண்களுக்குக் கிடைத்த சாபமாக அமைந்திருக்கிறது. இங்கே பெண் சுதந்திரம் என்பது எவ்வகையானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காலையில் வீட்டை விட்டுச் சென்று இரவு பன்னிரண்டு மணிக்குத...

அரசியல் விழிப்புணர்வு

Image
          அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்பது சிலப்பதிகாரத்தின் வாக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் மக்கள் நலன்கருதி நாட்டை ஆள வேண்டும். மக்களுக்கு ஏற்படும் அல்லல்களைத் துடைத்தொழிப்பதே அரசின் முதல் கடமையாகக் கொள்ள வேண்டும். அந்த நோக்கத்திலிருந்து பிளவுபடும் அரசாங்கம் மக்களால் புறக்கணிக்கப்படும் என்பது தெளிவு. மக்களாட்சியில் நாட்டின் நிதியை நேர்மையாகக் கையாள்வது அவசியம். சுய இலாபத்திற்காக நாட்டின் நிதியைத் தவறாகக் கையாளும் அரசியல் தலைவர்களின் விதியை மாற்றி அமைக்கும் சக்தியை மக்கள் கொண்டுள்ளனர். அதைத்தான் இளங்கோளிவடிகள் அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்றார். அவ்வாறான தலைவர்கள் காலத்தின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதைத்தான் விதி வலியது என்பார்கள்.     தவறு இழைக்கும் அரசியல் தலைவர்களை அஞ்சாமல் தட்டிக் கேட்கும் மனத்திட்பத்தை மக்கள் கொண்டிருக்க வேண்டும். இதுதான் தெளிவான அரசியல் விழிப்புணர்வு. அரசியல் விழிப்புணர்வு என்பது தீவிர அரசியலில் ஈடுபடுவது என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. நாட்டில் நடைபெறும் அரசியல் தொடர்...

கடற்கரை

Image
      உலகில் கண்களைக் கவரும் இடங்கள் பல நமக்குத் தெரியாமல் உள்ளன. ஆனால், நாம் அனைவருக்கும் தெரிந்த கண் கவர் இடங்களில் கடற்கரையும் ஒன்று எனலாம். கடற்கரையைப் பற்றி அறியாதவர் யாவரும் இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடற்கரைக்குச் செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். உலகில் அனைத்து இடங்களிலும் கடற்கரை இருக்கின்றது. கடற்கரைக்குச் செல்வதனால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன.     நாம் கடற்கரைக்குச் செல்வதால் சுத்தமான உயிர்வளியைச் சுவாசிக்க முடிகின்றது. காரணம் நாம் வழக்கமாக சுவாசிக்கும் காற்றைவிட கடற்கரையில் சுவாசிக்கும் காற்றில்  அதிகமாக உள்ளது. நாம் கடற்கரையில் சுவாசிக்கும் காற்று, நம்மை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அது மட்டுமல்லாது, சுத்தமான உயிர்வளியைச் சுவாசிப்பதனால் இரத்த ஓட்டம் சீர் அடையும். அதனால், நாம் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழலாம். அதோடு, கடற்கரை காற்றில் உயிர்வளியின் அளவு அதிகமாக இருப்பதனால்தான் சிலர் கடற்கரை ஓரத்தில் மெது ஓட்டம் ஓடுகின்றனர், உடற்பயிற்சி செய்கின்றனர். ஆகவே, கடற்கரைக்குச் செல்வதனால்...

வேளாண்மை

Image
    ஒரு நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அதன் பொருளாதாரம் கனிம வளம், இயற்கை வளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. உணவை உற்பத்திச் செய்வதும் கால்நடைகளை வளர்ப்பதும் வேளாண்மை ஆகும். வேளாண்மை ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணி போன்றது எனலாம். மக்களின் அத்தியாவசியமான உணவுப் பொருள்களை உற்பத்திச் செய்கிறது. நாட்டின் பணவீக்கத்தைத் தவிர்க்க வேளாண்மை உதவுகிறது. வேளாண் மூலப்பொருளால் தொழில் துறை வளர்கின்றது. வேளாண்மை ஒரு நாட்டின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கிறது.     தொடக்கக்காலங்களில் உணவைத் தேடி அலைந்த மனிதன் சமூகமாக வாழ்வதற்குக் கற்றுக் கொண்டான். மனிதன், தேவைகள் அதிகரிக்க வேளாண்மையை ஒரு தொழிலாகச் செய்யத் தொடங்கினான். தொடக்ககாலங்களில் ஆற்றோரங்களில், நீர் வளம் அமைந்த பகுதிகளில் ஆரம்பமான வேளாண்மை, உலோகத்தின் பயன்பாட்டுக்குப் பின் பல இடங்களிலும் பரவ ஆரம்பித்தது. மனிதர்கள் தனது தேவைக்குப் போக எஞ்சிய உணவுப் பொருள்களைக் கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்தனர். வேளாண்மை செய்ய கால்நடைகள் உதவின. மேலும், மனிதனுக்கும் கால்நடைகளால் பால், இறைச்சி, தோல், உரோமம், உரம் போன்ற பல்வேறு பயன்கள...

மின்வணிகம்

Image
    'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று நம் முன்னோர்கள் வாய் மொழிந்துள்ளனர். ஆனால், இன்று திரை கடலோடி திரவியம் தேடுவதற்கு அவசியமற்றுப்போகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கணினியின்வழி பணம் ஈட்டக்கூடிய சூழல் நிலவுகிறது. நவீன உலகமயமாதலால் ஆழி போன்று பரந்து விரிந்திருந்த உலகம் ஒரு விறல் நுனியில் அடங்கி கொண்டிருக்கிறது.அதற்குக் காரணம் நாம் ஓர் இடத்தில் இருந்தவாறே சில மணித்துளிகளில் உலகில் எந்த இடத்தில் இருப்பவரிடமும் தொடர்புகொண்டு வணிகம் செய்யும் சூழலைக் குறிப்பிடலாம். இன்று உலகின் மொத்தத் தொலைத்தொடர்புகளையும் இணையம் சிறைப்படுத்தி வைத்துள்ளது எனில் அது மிகையாகாது.     இந்த இணையத்தின் பயன்பாடும் ஆதிக்கமும் உலகின் மொத்த செல்வங்களை உள்ளடக்கிய வணிகச் செயல்பாடுகளையும் விட்டுவைக்கவில்லை. இன்றைய 21ஆம் நூற்றாண்டில் வணிக மாற்றத்திற்கு வித்திட்டது உலகமயமாதல் கொள்கையாகும். பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தகர்த்தேறிந்து உலக வணிகத்தைக் கையகப்படுத்த இணையம் பெரும் பங்காற்றி வருகிறது. பாரம்பரிய வணிகத்தில் காகிதத்தின் பயன்பாடு மிகுந்திருந்தது. மின்...

முக்குளிப்பு

Image
    நாட்டின் புகழ்பெற்ற முக்குளிப்பு வீராங்கனையான பண்டேலேலா ரீனோங் ஒலிம்பிக் போட்டிகளின் மூலம் நமது நாட்டிற்கு 2 பதக்கங்களையும் உலக வெற்றியாளர் போட்டியின்வழி 4 பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த  பண்டேலேலா 10 மீட்டர் உயரத்திலிருந்து நீரில் குதிக்கும் திறன் வாய்ந்தவர். மலாயாப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர், 'புக்கிட் ஜாலில்' விளையாட்டுப் பள்ளியில் முக்குளிப்பு விளையாட்டில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார். தேசிய நிலையிலும், ஆசியான், ஆசியா, ஒலிம்பிக் ஆகிய போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்று நமது நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 'காமன்வெல்த்' போட்டியில் தங்கம் வென்றார். 2008 முதல் 2018 ஆம் ஆண்டு வரை அனைத்துலகப் போட்டிகளில் வெற்றிக் கொடி நாட்டியுள்ள இவர், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.      பண்டேலேலா 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் முக்குளிப்புப் போட்டியில் காலடியெடுத்து வைத்தபோது அவருக்கு 27ஆவது இடம்தான் கிடைத்தது. ஆனால், அவரது தீவிர தொடர் பயிற்சிகளின்வழ...

கூட்டுக் குடும்பம்

Image
      ஒருவனின் வாழ்க்கையில் குடும்பம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு தாய் வயிற்றிலிருந்து பிறந்த உடன்பிறப்புகள், மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவருமே ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானவர்கள். நம் வாழ்க்கையின் இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் முதலில் கைக்கொடுத்து நிற்பது நம் குடும்பத்தார் மட்டுமே. அனைவரின் வாழ்க்கையிலும் குடும்பத்தைவிட பெருஞ்செல்வம் வேறொன்றும் கிடையாது.      இன்றைய காலக் கட்டத்தில் குடும்ப அமைப்பு மாற்றிக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் பெரிய கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். ,ஆனால், இன்றைய நவீன யுகத்தில் அத்தகைய குடும்பச் சூழல் அடியோடு மாறிவிட்டது. இப்போதுள்ள குடும்பங்கள் யாவும் தனிக் குடும்பம் என்ற பெயரில் சிறிய குடும்பமாகிவிட்டது. இந்தப் பெரிய மாற்றங்கள் ஏற்பட என்ன காரணம் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா! இன்றையக் காலக் கட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்பது பல பேருக்குப் பெரிய சுமையாகவும் பிரச்சனையாகவும் மாறிவிட்டது என்றும் கூறலாம். கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதில் சில ஆதாயங்கள் இருக்கின்றன. அதே வேளையில் அதில் பல ...

ஆறுவது சினம்

Image
            மனிதனின் உணர்வுகளில் ஒன்றுதான் கோபம். கோபம் என்கின்ற உணர்ச்சியை வளரவிட்டால் அது வளர்த்தவனையே கொள்ளும் என்பார்கள். நமது குடும்பத்தில் ஏற்படுகின்ற பெரும்பாலான துன்பங்களுக்குக் கோபமே காரணமாக அமைகின்றது என்றால் மிகையாகாது.                              தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்                               தன்னையே கொள்ளும் சினம்                      (305) என்பது வள்ளுவன் வாக்கு. எனவே, நாம் கோபம் எனும் உணர்ச்சியை அடக்கி ஆள அறிந்திருக்க வேண்டும். யூ.ஸி இர்வின்னை சேர்ந்த ரேமண்ட் நோவாகோ, 1975லிருந்து கோபம் குறித்து மிகுதியான இலக்கியங்களை படைத்துள்ளார். அவர் கோபத்தை மூன்று நிலைகளில் வகைப்படுத்திக் காட்டுகிறார். அவையாவன அறிவைப் பாதிக்கக்கூடிய நிலை, உடலைப் பாதிக்கக்கூடிய நிலை, நடத்தையைப் பாதிக்கக்கூடிய நிலை எ...

நேர்காணல் என்றால் என்ன?

Image
>> நேர்காணல் என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெரும் ஓர் உரையாடல்   ஆகும். >> நேர்காணல் என்பது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒருவரும், பதில்கள் தருபவர் ஒருவருமாக ஒன்றுக்கு ஒன்று உரையாடலாகவே இருக்கும். >> நேர்காணல் பல்வேறு துறையில் பல்வேறு வகையில் காணப்படுகின்றன. செய்திக்கு மூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகும் ஒருவரை நேர்காணல் கொள்வது செய்தி திரட்டுவதில் முக்கியமான ஒன்றாகும். அதுமட்டுமின்றி செய்தியாளராக இருப்பவர் நேர்காணல் கொள்வதில் திறனுடையவராக இருக்க வேண்டும்.  >> நேர்காணல் இல்லாமல் செய்திகள் இல்லை எனுமளவிற்கு செய்திகளில் நேர்காணல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. >> நேர்காணல் என்பது ஒருவரோடு தொடர்பு கொண்டு அவர் மூலமாக விவரங்களைக் கேட்டுப் பெறுவதாகும். இது நேரிலோ, தொலைப்பேசி வழியாகவோ, கடிதம் வழியாகவோ அல்லது புதிய தகவல் தொடர்பு சாதன வழியாகவோ இருக்கலாம். >> நேர்காணலின் நன்மைகள்: # புதிய கட்டுரைக் கருத்துகளைப் பெறலாம். # அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் அறிய துணைப் புரியும். # செய்திகளை உருவாக்கலாம்  # பல்வேறு கருத்துக்கள் வெளிவர வாய்ப்பாயிர...

உடல்நலம்

Image
    ' நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதனை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மனிதர்களாகிய நமக்கு உடல்நலம் மிகவும் முக்கியம். உடல்நலம் நம் உயிரினும் மேலானது. உடல்நலம் குன்றி உடல் மோசமாக ஆகிவிட்டால் உயிருக்கே ஆபத்து. நோயற்ற வாழ்வும், சுகாதாரமும், நலமும் உடல்நலனுக்கு அர்த்தமாகும். நாம் உடல்நலனுடன் இருப்பதே இறைவன் நமக்களித்த சந்தோசம் மற்றும் வரமாகும். 'எனக்கு இந்த வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை' எனும் வசன வரியைத் தவிர்த்துவிட்டு இறைவன் நம்மை உடல்நலத்துடன் வைத்துக் கொள்வதை எண்ணி சந்தோசம் அடைய வேண்டும். உடல்நலத்தைப் பாதுகாப்பதற்காகப் பல வழிமுறைகள்  விரல் நுனியில் உள்ளன.     முதலாவதாக, நமது அன்றாட நடவடிக்கையில் ஒன்றான உணவுப் பழக்கத்தைக் கவனிக்க வேண்டும். நம் உணவில் நன்மை மற்றும் தீமை என அனைத்தும் உள்ளன. நாம் உணவு உண்ணும் போது சமசீர் உணவானது, உணவு கூம்பகத்தைப் பின்பற்ற வேண்டும். உணவு கூம்பகத்தில் நமது உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு முதல் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு வரை அனைத்தும் வரிசையாக  இருக்கும். உதாரணத்திற்கு, எண்ணெய் சம்பந்தப்பட்ட உணவு...